lch helicopter:prachand: இந்தியத் தயாரிப்பான இலகு ரக தாக்குதல் ‘பிரசந்த்’ ஹெலிகாப்டர் விமானப்படையில் இணைப்பு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டரான “பிரசந்த்”(prachand) விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டது. 

HAL Light Combat Helicopter: IAF inducts indigenously-built Light Combat Helicopter

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டரான “பிரசந்த்”(prachand) விமானப்படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டது. 

கடந்த 1999ம் ஆண்டு கார்கில் போரின்போது மலைப்பகுதியில் ரோந்துப்பணி, தாக்குதலில் ஈடுபட ஹெலிகாப்டர்தேவையாக இருந்தது. இதையடுத்து, உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி,இந்தியாவிலேயே பிரசந்த் ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டது. 

பிரதமர் கதி திட்டம்: சீனாவிலிருந்து தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு ஈர்க்கும் மோடியின் மெகா முயற்சி

இந்த பிரசந்த் ஹெலிகாப்டரை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்(ஹெச்ஏஎல்) உருவாக்கியுள்ளது. 5.8 டன் எடையும், 2 எஞ்சின்கள் கொண்டதாக ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பறந்துகொண்ட எதிரியின் இலக்குகளை குறிபார்த்து சுடும் துப்பாக்கிகள், 20மீட்டர் டரென்ட் துப்பாக்கிகள், ராக்கெட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன

HAL Light Combat Helicopter: IAF inducts indigenously-built Light Combat Helicopter

ஜோத்பூர் விமானப்படைத்தளத்தில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முறைப்படி பிரச்சந்த் ஹெலிகாப்டர் விமானப்படையில் இணைக்கப்பட்டது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படைத் தளபதி  ஏர்மார்ஷல் விஆர் சவுத்ரிஉள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். 

எதிரிகளின் இலக்குகள், டாங்கிகள், பங்கர்கள், ட்ரோன்கள், உள்ளிட்டவற்றை உயர்த்தில் பறந்துக்கொண்டிருக்கும்போதே குறிபார்த்து துல்லியமாக சுடும் தொழில்நுட்பம் பிரச்சந்த் ஹெலிகாப்டருக்கு இருக்கிறது. 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிகழ்ச்சியில் பேசியதாவது: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் விமானப்படையில் இணைக்கப்பட்டது, இந்திய பாதுகாப்பு துறையில் அற்புதமான நிகழ்வு.

குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக: ஆம்ஆத்மிக்கு 2 இடங்கள்: கருத்துக்கணிப்பில் தகவல்

HAL Light Combat Helicopter: IAF inducts indigenously-built Light Combat Helicopter

இந்தியாவின் இறையான்மையை பாதுகாப்பதில் இந்திய விமானப்படை முக்கியமான பங்காற்றுகிறது. இந்த ஹெலிகாப்டர் வருகையால், விமானப்படையின் பலம் மேலும் பெருகும் என நம்புகிறேன். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உற்பத்தியை பெருக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. நாட்டின் பாதுகாப்பு என்பது அனைத்தையும்விட மிகவும் முக்கியமானது, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது” எனத் தெரிவித்தார்

HAL Light Combat Helicopter: IAF inducts indigenously-built Light Combat Helicopter

பிரசந்த் ஹெலிகாப்டருக்கு வழக்கம்போல் நீர்பாய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரின்போது மலைப்பகுதியில் ரோந்துப்பணிக்கும், எதிரிகளை அழிக்கவும் தாக்குதல் ஹெலிகாப்டர் தேவை என உணரப்பட்டது. அந்த நோக்கம் இப்போது வடிவமாகியுள்ளது.

2020ம் ஆண்டு பிப்ரவரியில் இலகுரக ஹெலிகாப்டர் உற்பத்தி தயார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு, ரூ.3,887கோடியில் 15 இலகுரக ஹெலிகாப்டரை வாங்க ஒப்புதல் அளித்தது.

பாரத் ஜோடோ நடைபயணம்: ராகுல் காந்தியுடன் சோனியா காந்தி பங்கேற்பு

இதன்படி 10 ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படைக்கும், 5 ஹெலிகாப்டர்கள் ராணுவத்துக்கும் வாங்கப்பட்டுள்ளது. பிரசந்த் ஹெலிகாப்டர் மிகவும் உயரமான  இடங்களிலும் பறக்கக்கூடியது, குறிப்பாக இமயமலைப்பகுதிகளுக்கு மேலே பறக்கும் திறன் அடையது, அனைத்து காலநிலையிலும் எளிதாகப் பறந்து செல்லும் தன்மை கொண்டது, தாக்குதல் பணி, மீட்புப்பணிக்கும் இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியும். 

HAL Light Combat Helicopter: IAF inducts indigenously-built Light Combat Helicopter

அடர்ந்த வனப்பகுதி, மலைப்பகுதி, நகர்ப்புறங்கள் அனைத்திலும் கண்காணிப்பு பணியை பிரசந்த் ஹெலிகாப்டர் மூலம் செய்ய முடியும். எல்லையோர கண்காணிப்பு, வான்வழியில் எதிரி விமானங்களை தாக்கி அழித்தல் ஆகியவற்றில் இந்த  ஹெலிகாப்டர் சிறப்பாகச் செயல்படும்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios