Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் கதி திட்டம்: சீனாவிலிருந்து தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு ஈர்க்கும் மோடியின் மெகா முயற்சி

சீனாவிலிருந்து தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு ஈர்க்கும் வகையில் ரூ.1.20 லட்சம் கோடியில் பிரதமர் மோடியால் “பிஎம் கதி சக்தி” திட்டம் விளங்குகிறது. 

India is planning to steal $1.2 trillion worth of industries from China.
Author
First Published Oct 3, 2022, 12:52 PM IST

சீனாவிலிருந்து தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு ஈர்க்கும் வகையில் ரூ.1.20 லட்சம் கோடியில் பிரதமர் மோடியால் “பிஎம் கதி சக்தி” திட்டம் விளங்குகிறது. 

பிரதமரின் கதி சக்தி என்பது, டிஜிட்டல் தளம்,  ரயில்வே மற்றும் சாலை  போக்குவரத்து உட்பட 16 அமைச்சகங்களை ஒருங்கிணைத்து,  உள்கட்டமைப்பு இணைப்பு திட்டங்களை அமல்படுத்துவதாகும். 
இந்த திட்டத்தால், ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற மக்கள், சரக்கு போக்குவரத்து இணைப்பு மற்றும் சேவைகளை ஒரு போக்குவரத்திலிருந்து மற்றொரு போக்குவரத்துக்கு எளிதாக இணைப்பதால், உடக்கட்டமைப்பு திட்டங்கள் விரைவாக முடிக்க முடிகிறது, திட்டச் செலவை அதிகரிக்காமல் குறித்த இலக்கில் முடிக்க முடியும். 

India is planning to steal $1.2 trillion worth of industries from China.

இந்தியாவில் உள்கட்டமைப்புத் திட்டங்களில் பாதிக்கு மேற்பட்ட திட்டங்கள் தாமதமாகியுள்ளன. 4 திட்டங்களில் ஒரு திட்டம் திட்டச் செலவைவிட அதிகமாகியுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வாக தொழில்நுட்பம்தான் இருக்க முடியும் என்று பிரதமர் மோடி நம்புகிறார்

அஞ்சல மாதாந்திர வருமான திட்டம்: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க இதோ டிப்ஸ்!

இந்த தடைகளைத் தகர்க்கவே ரூ.1.20 லட்சம் கோடியில் பிஎம் கதிசக்தி திட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது திட்டங்களின் வேகத்தை அதிகப்படுத்தி, குறித்த நேரத்தில் முடித்து, காலதாமதத்தையும், வீண் செலவையும் தவிர்ப்பாகும். இந்த கதி சக்தி திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு தங்கள் திட்டங்களுக்கு ஒரே இடத்தில் ஒப்புதல், திட்ட மதிப்பு அனைத்தும் அறிய முடியும்

மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் சரக்குப்போக்குவரத்துப் பிரிவு செயலாளர் அம்ரித் லால் மீனா கூறுகையில் “ பிஎம் கதி சக்தி திட்டத்தின் நோக்கம், திட்டத்தின் செலவை அதிகப்படுத்தாமல், நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடிப்பதாகும். சர்வதேச நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலை, நிறுவனங்களை அமைக்க இந்தியாவை சிறந்த நாடாக தேர்ந்தெடுக்க வைத்தலாகும்.

India is planning to steal $1.2 trillion worth of industries from China.

அதிவேகமாகத் திட்டங்களை முடிக்க உலக நாடுகள் சீனாவைத்தான் முன்பு நம்பியிருந்தன. தற்போது, இந்தியாவின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளன. சீனாவைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணம் தொழிலார்கள் எளிதாகக் கிடைத்தல், தகவல்தொடர்பு எளிமை, ஆங்கிலம் தெரிந்த தொழிலாளர்கள் இருத்தல் போன்றவற்றால் திட்டப்பணிகள் விரைவாக, குறித்த நேரத்தில் முடிக்க முடிகிறது. ஆனால் சீனாவில் இருக்கும் மோசமான உள்கட்டமைப்பு பல முதலீட்டாளர்களை பின்வாங்க வைத்துள்ளது” எனத் தெரிவித்தார்

கியர்னி இந்தியாவின் கூட்டாளர் அன்சுமன் சின்ஹா கூறுகையில் “ கதி சக்தி திட்டத்தின் மூலம் பொருட்கள், உற்பத்தி பொருட்களை எளிதாக நாட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் விரைவாகக் கொண்டு செல்ல முடியும். இதற்காக நாட்டின் சரக்குரயில் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து ஆகியவற்றை ஒருங்கிணைத்தலாகும். கதி சக்தி திட்டத்தை உற்றுநோக்கினால், அதன் சாரம்சம் என்பது சரக்குப் போக்குவரத்து, வழித்தடங்களை வலிமைப்படுத்துவதாக இருக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக்கணக்கு வைத்திருக்கிறீர்களா! கணக்கை முடிக்க இந்த வழிகளை பின்பற்றுங்கள்

அதுமட்டுமல்லாமல் அரசு ரீதியாக திட்டங்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதம் செய்வது பெரும் கவலையாக இருக்கிறது. கதி சக்தி போர்டலில் உள்ள 1,300 திட்டங்கள் அனைத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுடையது. இதில் 40 சதவீதம் திட்டங்கள் நிலம் கையகப்படுத்துதல், வனம் மற்றும் சுற்றுச்சூழல்அனுமதி தருதல் போன்றவற்றால் தாமதமாகி, செலவு அதிகரித்துள்ளது. 

கதி சக்தி திட்டத்தின் மூலம் மத்திய அரசு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாலை அமைக்கிறது.இதன் மூலம் தொலைப்பேசி கேபிள், பைப்லைன் போன்றவற்றுக்காக மீண்டும் தோண்டவேண்டியஅவசியமில்லை” எனத் தெரிவித்தார்

India is planning to steal $1.2 trillion worth of industries from China.

மத்திய புள்ளியல் மற்றும் திட்டமிடல் துறை இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, காலதாமதம், திட்டச் செலவு அதிகரித்தல் ஆகியவைதான் கொரோனா பெருந்தொற்றிலிருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதில்சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் 1,568 திட்டங்களில், 721 திட்டங்கள் தாமதத்தில் உள்ளன, 423 திட்டங்களின் உண்மையான செலவைவிட மீறிச் சென்றுள்ளன எனத் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக: ஆம்ஆத்மிக்கு 2 இடங்கள்: கருத்துக்கணிப்பில் தகவல்

திட்டப்பணிகளை குறித்தநேரத்தில்முடிக்கவும், தேவையற்ற காலதாமதம், வீண் செலவு ஆகியவற்றை தவிர்க்கவும்,  மத்திய அரசு கதி சக்தி திட்டத்தை கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தால்தாந் ஆப்பிள் நிறுவனம் ஐ-போன்14 செல்போனை உலகில் அறிமுகம்செய்த 2 மாதங்களில் இந்தியாவில் தயாரிக்கிறது. சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைத்துள்ளது.ஓலா நிறுவனம், பேட்டரி கார், இருசக்கர வாகனங்களை தயாரிக்க முன்வந்துள்ளது. 

196 திட்டங்களை தேர்ந்தெடுத்து, திட்டங்களுக்குத் தேவையான போக்குவரத்து இணைப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் நிலக்கரி, உருக்கு, உணவுப் போக்குவரத்து விரைவுப்படுத்தப்படும். 

Follow Us:
Download App:
  • android
  • ios