Post Office Monthly Income Scheme: அஞ்சல மாதாந்திர வருமான திட்டம்: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க இதோ டிப்ஸ்!

அஞ்சல மாதாந்திர வருமானத் திட்டம்(பிஓஎம்ஐஎஸ்) கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதிகமானோர் ஆர்வமாக சேர்ந்து பலன் பெற்று வருகிறார்கள். 

Post Office Monthly Income Scheme: Money-doubling Advice for Five Years

அஞ்சல மாதாந்திர வருமானத் திட்டம்(பிஓஎம்ஐஎஸ்) கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதிகமானோர் ஆர்வமாக சேர்ந்து பலன் பெற்று வருகிறார்கள். 

அனைத்து வயது தரப்பினரும் முதலீடு செய்வதற்கு ஏற்ற திட்டமாக மாதாந்திர வருமானம் திட்டம் இருந்து வருகிறது. மத்தியஅரசின் நம்பிக்கையான திட்டம் என்பதால் கணக்கு வைப்போருக்கு மாதாந்திர வருமானம் என்பது நிச்சயமாகிறது. முதலீடு செய்பவருக்கு ஒவ்வொரு மாதமும் அவரின் சேமிப்புக் கணக்கில் வட்டி டெபாசிட் செய்யப்படும்.

Post Office Monthly Income Scheme: Money-doubling Advice for Five Years

அதுமட்டுமல்லாமல் முதலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல், வராமல் தடுக்க பாதுகாப்பான இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து மாதாந்திர வருமானத்தை ஈட்டலாம். 5 ஆண்டுகளில் டெபாசிட் செய்த பணம் முதிர்ச்சி அடைந்தபின் அந்த பணத்தை எடுக்கலாம். 

அதேபோல ஆர்டி செலுத்துவோருக்கும் அஞ்சலகம் மதாந்திர வருமானம் மூலம் சிறந்த வட்டி தருகிறது. ஆர்டி கணக்கு திறப்போருக்கு அஞ்சலகம் சார்பில் 5.8சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு வழங்கப்படும். 

இஎம்ஐ அதிகரிக்கும்! எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி வட்டி வீதம் அதிகரிப்பு

உதாரணமாக ரூ.4.50 லட்சம் முதலீடு செய்தால் மதாந்திர வருமானம் திட்டம் மூலம் மாதம் தோறும் 6.6 சதவீதம் வட்டி கணக்கிடப்பட்டு ரூ.2475 சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதுவே ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் ரூ.4,922 வரவு வைக்கப்படும்.

Post Office Monthly Income Scheme: Money-doubling Advice for Five Years

பண்டிகை போனஸ்! எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு: ஆனால்..

ஒருநபர் மாதாந்திர வருமானத் திட்டத்தில் தொடங்க விரும்பினால், ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.4.50 லட்சம் டெபாசிட் செய்யலாம். ஜாயிண்ட் அக்கவுண்ட்டாக ஓபன் செய்து ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஒவ்வொரு மாதம் முடிந்தபின் வட்டி கணக்கிடப்பட்டு சேமிப்புக் கணக்கில் சேர்க்கப்படும்.

சேமிப்புக்கணக்கிலிருந்து முதலீட்டாளர் வட்டியை எடுக்கலாம். முதலீடு செய்பவர் ஒருவிஷயத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டும், மாதந்தோறும் வழங்கப்படும் வட்டியை கோராவிட்டால், அந்த வட்டிக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது. 

நாட்டின் முதல் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

10வயதுக்கு மேற்பட்டவர்கள் மீதுகூட பாதுகாவலர் அல்லது பெற்றோர் மூலம் கணக்கு தொடங்க முடியும். 5 ஆண்டுகளுக்குப்பின் இந்த திட்டம் முடிவுக்கு வரும், அப்போது, குறிப்பிட்ட அஞ்சலகத்தில் பாஸ்புக்கை ஒப்படைத்து பணத்தைப் பெறலாம். கணக்குத் தொடங்கியவர் முதிர்ச்சி காலத்துக்கு முன்பே காலமாகிவிட்டால், அவரின் வாரிசுதாரர் கணக்கை முடித்து பணத்தைப் பெறலாம்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios