hdfc:lichf: இஎம்ஐ அதிகரிக்கும்! எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி வட்டி வீதம் அதிகரிப்பு

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி வங்கிகள் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன.

As LIC Housing Finance and HDFC raise lending rates, EMIs will increase.

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தை உயர்த்தியதைத் தொடர்ந்து, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி வங்கிகள் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன.

இதனால் வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் பெற்றவர்கள் மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ அளவு அதிகரிக்கும். மாத ஊதியத்திலிருந்து கணிசமான தொகையை இஎம்ஐக்கு செலவிட வேண்டியதிருக்கும். 

As LIC Housing Finance and HDFC raise lending rates, EMIs will increase.

நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துவருவதைத் தடுக்கும்வகையில் ரிசர்வ் வங்கி தனது நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான ரெப்போ ரேட் வீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது. 
இதன் மூலம் வட்டி 5.90ச தவீதமாக உயர்ந்துத.தொடர்ந்து 3வது நிதிக்கொள்கைக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்தியது.

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தை உயர்த்தியதைடுத்து, அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வட்டியை உயர்த்தி வருகின்றன.

அடல் பென்ஷன் திட்டத்தில் வருமானவரி செலுத்துவோருக்கு இடமில்லை: அக்டோபர் முதல் அமலானது

நடுத்தர மக்களின் வீட்டுக்கனவை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்காற்றும் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், கடனுக்கான வட்டியில் 50 புள்ளிகளை நேற்று உயர்த்திஅறிவித்தது. எல்ஐசி ஹவுசிங் பிரைம் லென்டிங் ரேட்(எல்ஹெச்பிஎல்ஆர்) வீதம் 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது என்று எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.

As LIC Housing Finance and HDFC raise lending rates, EMIs will increase.

அதேபோல ஹெச்டிஎப்சி வங்கியும் கடனுக்கான வட்டியை உயர்த்தி நேற்று அறிவித்துள்ளது. 

அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் 5 மாற்றங்கள் என்ன?

ஹெச்டிஎப்சி வங்கி வெளியிட்ட அறிவிப்பில் “ ஹெச்டிஎப்சி வங்கி வீட்டுக்கடனுக்கான தனது ஆர்பிஎல்ஆர் வீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டிவீதம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்தது” எனத் தெரிவித்துள்ளது. கடந்த 5 மாதங்களில் ஹெச்டிஎப்சி வங்கி 7வது முறையாக வட்டிவீதத்தை உயர்த்தியுள்ளது.

ஹெச்டிஎப்சி, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்கள் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து வங்கிகள் தங்களின் கடனுக்கான வட்டியை உயர்த்தி அறிவிப்பு வெளியிடும்.

பண்டிகை போனஸ்! எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு: ஆனால்..

இதனால் வீட்டுக்கடன், வாகனக்கடன்,தனிநபர் கடன் பெற்றவர்கள் அதிகமான இஎம்ஐ செலுத்த வேண்டியதிருக்கும், பெரிய சிரமத்துக்குள்ளாவார்கள்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios