atal pension yojana: அடல் பென்ஷன் திட்டத்தில் வருமானவரி செலுத்துவோருக்கு இடமில்லை: அக்டோபர் முதல் அமலானது
வருமானவரி செலுத்துவோர் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் சமூக பாதுகாப்புத் திட்டமான அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேர முடியாது என்ற நிதி அமைச்சகத்தின் அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
வருமானவரி செலுத்துவோர் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் சமூக பாதுகாப்புத் திட்டமான அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேர முடியாது என்ற நிதி அமைச்சகத்தின் அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இஎம்ஐ அதிகரிக்கும்! கடனுக்கான ரெப்போ ரேட் 50 புள்ளிகள் உயர்வு: வட்டி 5.90% மாக உயர்வு:ஆர்பிஐ
கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு அடல் பென்சன் திட்டத்தைக் கொண்டு வந்தது.இதன்பிடி அமைப்பு சாரா பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் பணம் செலுத்தினால் 60வயதுக்குப்பின் ரூ.1000 முதல் ரூ.5ஆயிரம் வரை ஓய்வூதியம் கிடைக்கும்.
கடந்த 7 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இந்த திட்டதில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது.
அக்டோபர் 1ம் தேதி முதல் வருமானவரி செலுத்துவோர் யாரும் அடல் பென்சன் திட்டத்தில் சேர்வகற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேநேரம் அக்டோபர் 1ம் தேதிக்குள் சேர்ந்திருந்தாலும் அவர்களுக்குப் பாதிப்பில்லை.
அக்டோபர் 1 முதல் டோக்கனைசேஷன் அமல்! கிரெடிட், டெபிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
அக்டோபர் 1ம் தேதிக்கு பின் அல்லது அதற்கு முன் அடல் பென்சன் திட்டத்தில் ஒருவர் சேர்ந்திருந்தால், அவர் வருமானவரி செலுத்தியவரா அல்லது இல்லையா என்பது கண்டறியப்படும். அவர் வருமானம் செலுத்துபவராக அல்லது வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவராக இருந்தால், அவர் இதுநாள்வரை செலுத்திய பணம் திருப்பித் தரப்படும்.
வருமானவரி சட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வருமானம் ஈட்டுவோர் வருமானவரி செலுத்தத் தேவையில்லை. 18முதல் 40வயதுள்ள அனைத்து பிரிவினரும் அடல் பென்சன் திட்டத்தில் சேரலாம்.
அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் 5 மாற்றங்கள் என்ன?
வங்கி அல்லது அஞ்சலகம் மூலம் இந்த திட்டத்தில் சேரலாம். தற்போது அடல் பென்சன் திட்டத்தில் 2022 மார்ச் வரை 4.01 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த நிதியாண்டு மட்டும் 99 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.