H3N2 வைரஸ் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

H3N2 இன்ஃப்ளூயன்ஸா என்பது ஒரு வைரஸ் நோயாகும், இது நபருக்கு நபர் எளிதில் பரவுகிறது.

இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் என்பது வைரஸ் காய்ச்சல். அதாவது, பரவக் கூடிய வைரஸ் காய்ச்சல். லேசான சளி, லேசான தொண்டை வலி, லேசான இருமல் என்று இதன் பாதிப்புகள் இருக்கலாம். சில நேரங்களில் பாதிப்பு தெரியாமல் கூட இருக்கலாம். லேசான காய்ச்சலாகத் தொடங்கி தீவிர காய்ச்சலாக பாதிப்பை ஏற்படுத்தலாம்.

இதையும் படிங்க..மொபைல் போனுக்கு ஆசைப்பட்டு.. 4 காம கொடூரர்களால் சீரழிந்த பள்ளி மாணவியின் வாழ்க்கை!! அதிர்ச்சி சம்பவம்

தற்போது இன்ஃப்ளுயன்சா எச்3என்2 ( Influenza A subtype H3N2 ) என்ற வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்த வைரஸும் காற்றின் வழி பரவும் வைரஸ் என்பதால், கோவிட் 19 தொற்றுக்கு கடைப்பிடித்த தடுப்புமுறைகளின் மூலம் இந்த நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். 

முகக்கவசம் அணிவது, இருமல் வரும்போதும், தும்மும் போதும் முகத்தை மூடுவது, கைகளைக் கழுவுவது போன்ற நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நாடு முழுவதும் 90 பேர் H3N2 வைரஸாலும் , 8 பேர் H1N1 வைரஸாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா மற்றும் ஹரியானா மாநிலங்களில் தலா ஒருவர் இன்ப்ளூயன்சாவால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..இப்போ அடுத்த 13 பேர் எஸ்கேப்.! கட்சி தாவும் நிர்வாகிகள்.. காலியாகும் பாஜக கூடாரம் - அப்செட்டில் அண்ணாமலை