குஜராத்தில் காணாமல் போன் 41,621 பெண்கள் குறித்து காவல்துறை விளக்கம்

காணாமல் போன பெண்களில் இதுவரை 39,497 பேர் திரும்ப கிடைத்துவிட்டதாவும், 2,124 பேரை கண்டுபிடிக்கவே முடியவில்லை எனவும் குஜராத் காவல்துறை கூறியுள்ளது.

Gujarat Police debunks media reports on 40,000 missing women

குஜராத் மாநிலத்தில் கடந்த 5 வருடங்களில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதாக வெளியான செய்திக்கு குஜராத் மாநில காவல்துறையினர் பதிலளித்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் 41,621 பெண்கள் மாயமானதாக அண்மையில் செய்திகள் வெளியாயின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாநில அரசு தரப்பில் காவல்துறை அது பற்றி பதில் கூறியுள்ளது. காணாமல் போன பெண்களில் இதுவரை 39,497 பேர் திரும்ப கிடைத்துவிட்டதாவும், இன்னும் 2,124 பேரை கண்டுபிடிக்கவே முடியவில்லை எனவும் கூறியுள்ளனர். அதே சமயத்தில் காணாமல் போனதாக வெளியான செய்திகளை குஜராத் காவல்துறை மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரதட்சணை கேட்டு தினம் தினம் செக்ஸ் டார்ச்சர்... கணவர் மீது மனைவி போலீசில் புகார்

அதே வேளையில், கடந்த 2021, 22ஆம் ஆண்டுகளின் தரவுகளையும் மாநில அரசு வெளியிடவில்லை என்றும் அது தொடர்பாக மேலும் சில விளக்கங்கள் தேவைப்படுகின்ற எனவும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து குஜராத் காவல்துறை டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளது.

2016 - 2020ஆம் ஆண்டு வரை குஜராத்தில் 41,621 பெண்கள் காணாமல் போனதாக இந்திய குற்றப்பதிவு காப்பகம் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், 39,497 பேர் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் சேர்க்கப்பட்டுவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தகராறு, காதல், தேர்வில் தோல்வி போன்றவையே பெரும்பாலான பெண்கள் வீட்டை விட்டு வெளியேறியதற்குக் காரணங்களாக உள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய குற்றப் பதிவு காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், குஜராத் மாநிலத்தில் 2016ஆம் ஆண்டில் 7,105 பெண்களும், 2017ஆம் ஆண்டில் 7,712 பேரும், 2018ஆம் ஆண்டில் 9,246 பெண்களும், 2019ஆம் ஆண்டில் 9,268 பெண்களும், 2020ஆம் ஆண்டில் 8,290 பெண்களும் காணாமல் போயிருக்கிறார்கள்.

இதன் மூலம் சென்ற ஐந்து ஆண்டுகளில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரமாக ஆக உள்ளது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அரசு சார்பில் அளித்த விளக்கம் ஒன்றில், 2019-20ஆம் ஆண்டில் மட்டும் அகமதாபாத், வதோதரா பகுதிகளில் இருந்து 4,722 பெண்கள் காணாமல் போனதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ம.பி.யில் பேருந்து விபத்தில் 15 பேர் பலி; பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios