ம.பி.யில் பேருந்து விபத்தில் 15 பேர் பலி; பாலத்தில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியது
மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் இந்தூர் சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேருக்குக் காயம்.
மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்தில் இந்தூர் சென்று கொண்டிருந்த பேருந்து பாலத்தில் இருந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், சிறு காயங்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் கூறி இருக்கிறார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மத்தியப் பிரதேச அரசு ஏற்பாடு செய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.