குஜராத்தின் மோர்பி நகரில் 141 பேர் உயிரிழந்த, பழமையான மோர்பி பாலம் விழுந்து விபத்துக்குள்ளானத் குறித்து குஜராத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்துள்ளது. 

குஜராத்தின் மோர்பி நகரில் 141 பேர் உயிரிழந்த, பழமையான மோர்பி பாலம் விழுந்து விபத்துக்குள்ளானத் குறித்து குஜராத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்துள்ளது. 

இந்த விபத்துக் குறித்து மாநில அரசு பதில் அளித்த நோட்டீஸ் அனுப்ப குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோர்பி நகரில் மச்சுஆற்றின் குறுக்கை ஆங்கிலேயர் காலத்து பழமையான இரும்புக் கயிறு தொங்கு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலத்தின் பராமிரிப்பு பணியை சமீபத்தில் ஒரேவா என்ற நிறுவனம் செய்திருந்தது.

மோர்பி பாலம் விபத்து: எப்ஐஆர்-இல் ஒரேவா நிறுவனத்தின் பெயர் ஏன் இல்லை? ப.சிதம்பரம் கேள்வி

இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி இந்த பாலத்தில் மக்கள் சென்றபோது திடீரென பாலம் அறுந்து விழுந்தது. இதில் ஏராளமான மக்கள் ஆற்றில் விழுந்தனர். இந்த விபத்தில் 135 பேர் பலியானார்கள், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஒரேவா நிறுவனத்தைச் சேர்ந்த 9 பேரைக் கைது செய்தனர். இந்த விபத்து நடப்பதற்கு முன் சில நாட்களுக்கு முன்புதான் பாலம்பராமரிப்புத் தொகையாக ரூ.2 கோடியை மோர்பி நகராட்சியிடம் ஒரேவா நிறுவனம் கோரியிருந்தது.

குஜராத் மோர்பி பால விபத்துக்கு காரணம் இதுதான்.. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல் !!

இந்த விபத்து தொடர்பாக ஒரேவா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை, அவர்களின் பெயர் முதல்தகவல் அறிக்கையில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இரும்பு பாலம் பராமரிப்பில் அனுபவம் இல்லாத நிறுவனத்திடம் ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது, இதில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டுகிறது.

இந்நிலையில் மோர்பி பாலம் விபத்துக் குறித்து நாளேடுகளில் வந்த செய்தியை அடிப்படையாக வைத்து குஜராத் உயர் நீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. 

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார், நீதிபதி அசுடோஷ் ஷாஸ்திரி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழக்கை விசாரித்தது. நீதிபதிகள் கூறுகையில் “ இந்த விபத்துத் தொடர்பாக நடந்து வரும் விசாரணை, கைது செய்யப்பட்டவர்கள், விபத்து எவ்வாறு நடந்தது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மாநில அரசு, மோர்பி நகராட்சி ஆகியவை வரும் 14ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் 

134 உயிர்களை காவு வாங்கிய மோர்பி பாலம்… இது முதல் முறை அல்ல… வரலாறு கூறுவது என்ன

குஜராத் அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், நகராட்சி ஆணையர், மோர்பி நகராட்சி, மாவட்ட ஆட்சியல், மாநில மனித உரிமைகள் ஆணையம், ஆகியோர் வரும் 14ம் தேதிக்குள் பதில் அளி்க்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுகிறோம். இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, குஜராத் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் நீதிமன்றத்தில்நேரில் வர வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாநில மனித உரிமைகள் ஆணையம், இந்தவிபத்துத் தொடர்பாக விரிவான அறிக்கையை வரும் 14ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.