Morbi Bridge: மோர்பி பாலம் விபத்து: எப்ஐஆர்-இல் ஒரேவா நிறுவனத்தின் பெயர் ஏன் இல்லை? ப.சிதம்பரம் கேள்வி
குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் மச்சு ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் பாலத்தை பராமரித்த ஒரேவா நிறுவனத்தின் உரிமையாளர்கள் பெயர் ஏன் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் மச்சு ஆற்றில் அறுந்து விழுந்த விபத்தில் பாலத்தை பராமரித்த ஒரேவா நிறுவனத்தின் உரிமையாளர்கள் பெயர் ஏன் முதல் தகவல் அறிக்கையில் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத்தின் மச்சு ஆற்றின் குறுக்கை பழமையான தொங்குபாலம் இருந்தது. இந்த பாலம் பழமையானது என்பதால், அதை சீரமைக்கவும், பழுதுநீக்கவும் ஒரேவா என்ற நிறுவனத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனம் புகழ்பெற்ற கடிகாரத்தை தயாரிக்கும் நிறுவனமாகும், பாலம் பராமரிப்பில் இந்த நிறுவனத்துக்கு போதிய அனுபவம் இல்லை எனக் கூறப்படுகிறது.
குஜராத் மோர்பி தொங்கு பால விபத்து - பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோர்பி பாலத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் நின்றிருந்தபோது, திடீரென பாலம் அறுந்துவிழுந்தது. இதில் ஆற்றில் மூழ்கி 141 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்தில் குஜராத் அரசை காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்டஎதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. விபத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பூபேந்திர படேல் பதவி விலக வேண்டும் என்றும், உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் பாலம் அறுந்து விழுந்த விபத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பியுள்ளன.
குஜராத் மோர்பி பாலம் விபத்து... உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க அதிபர், துணை அதிபர் இரங்கல்!!
குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதி இரு கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில் இந்த விபத்து தேர்தலில் பெரிதாக எதிரொலிக்கும்.
இந்த விபத்துக் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை குஜராத் அரசுக்கும், பாஜகவுக்கும் முன் வைத்துள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில் கூறியதாவது:
மோர்பி துயரவிபத்து நடந்து 48 மணிநேரம் ஆகிவிட்டது. குஜராத் அரசும், பாஜகவும் ஏன் அடிப்படை கேள்விகளுக்குக் கூட பதில் அளிக்கவில்லை. இந்த விபத்துக் குறித்த முதல் தகவல் அறிக்கையில் நகராட்சி அதிகாரிகள், பாலத்தை பராமரித்த ஒரேயா நிறுவனத்தின் உரிமையாளர்கள் பெயர் ஏன் சேர்க்கப்படவில்லை.
விபத்துக்கு பொறுப்பேற்று இந்த துறை அமைச்சர், முதல்வர் உள்பட ஏன் பதவி விலகவில்லை. கேள்வி ஏதாவது கேட்டால், இந்த துயரத்தை அரசியலாக்குகிறார்கள் என்று கூறுகிறார்கள். பதில் ஏதும் தரா மறுத்தால் என்னவென்று சொல்வது
இவ்வாறு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.