குறைக்கப்பட்டது ஜிஎஸ்டி வரி... மத்திய  அரசு அதிரடி... மாநில அரசு தடாலடி...! 

ஜிஎஸ்டி முக்கியமாக ஏசி, சிமெண்ட், டயர் மீதான வரி குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி அதாவது, ஜிஎஸ்டி கடந்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இதற்கு இந்தியா முழுக்க எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் இடையே எதிர்ப்பு கிளம்பியது. இருந்தாலும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. 

அதன்படி, 5% ,12% ,18%, 28% என நான்கு பிரிவுகளாக பிரித்து ஜிஎஸ்டி வரி சதவீதம் வைக்கப்பட்டது.பல்வேறு பொருட்கள் மீதான வரி விகிதம் மாற்றி அமைப்பது குறித்து மத்திய மந்திரிகள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரி விதிப்பு சில பொருட்களுக்கு மட்டும் மாற்றி அமைத்து, அமலுக்கு கொண்டு வரப்படும் என ஏற்கனவே ஒரு கூட்டத்தில் தெரிவித்து  இருந்தார். இந்நிலையில் இன்று கூடி உள்ள கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் எளிமையாக முறைப்படுத்துவதற்கும், சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொகையை திரும்ப அளிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

 

மேலும் பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்திருந்தபடி, 99% பொருட்கள் 18 அல்லது அதற்கு குறைவான சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தார்.மேலும் ஆடம்பர பொருட்களான புகையிலை பொருட்கள் போன்றவற்றுக்கு மட்டும் 28% என்றும் மற்ற 99 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிவிதிப்புக்கு கொண்டுவரப்படும் என்றும் கூறப்பட்டது. 

அதுமட்டுமல்லாமல், ஆட்டோமொபைல்ஸ், சிமெண்ட், ரியல் எஸ்டேட்,  எலக்ட்ரானிக் கருவிகள் ஆகியவை மீதான வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  ஜிஎஸ்டியால் ரியல் எஸ்டேட் துறை சற்று முடங்கிப்போன நிலையில் மீண்டும் அதனை ஊக்குவிக்க சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களிலும் மத்தியில் ஆளும் பாஜக நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவற விட்டாலும் வலுவான கட்சியாக தான் உள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல்-மே மாதத்தில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு சலுகைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு முன்னதாக மக்களை பெரிய அளவில் பாதித்த ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டுவர அரசு முடிவுசெய்துள்ளது. அதில் குறிப்பாக ஏசி, சிமெண்ட் மீதான வரி குறைக்கப்படஆயத்தமாகி உள்ளது மத்திய அரசு.
 
தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் இதுபோன்ற அறிவிப்பு மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். தற்போது நடந்து முடிந்துள்ள கூட்டத்திற்கு பின், வெளியாகி உள்ள சிறிய விவரம் இதோ.

அதன்படி, ரூ.100க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 28% இல் இருந்து 18%ஆக குறைக்கப்பட்டது.

ரூ.100க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 12%ஆக குறைக்கப்பட்டது என டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.