பெங்களூரில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்படுவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கேரள மக்களின் ஒற்றுமையையும், மதச்சார்பின்மையையும் புகழ்ந்து பதிவிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரில் லங்கேஷ் பத்ரிகை என்ற வாரப்பத்திரிகையை நடத்தி வந்தவர் மூத்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்ேஷ். முற்போக்கு சிந்தனையாளரான கவுரிலங்கேஷ் மதவாத சக்திகளை கடுமையாக எதிர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு 8 மணி அளவில் கவுரியை அவரின் வீட்டுமுன், மர்மநபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பினர்.

தான் கொலைசெய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு கவுரி லங்கேஷ்பேஸ்புக்கில் சில பதிவுகளை அவர் பகிர்ந்துள்ளார். அதில், நான் அடுத்த முறை கேரளாவுக்கு வரும்போது, யாரிடம் இருந்தாவது நான் மாட்டிறைச்சி வாங்கி சாப்பிடுவேன் என்று பதிவைத் தொடங்கியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பேஸ்புக்கில் ஒரு பதிவை ஓணம் பண்டிகையன்று பகிர்ந்திருந்தார். அதில், ஓணம் பண்டிகையையொட்டி, கிறிஸ்தவகன்னியாஸ்திரிகள் ‘ திருவாதிராகளி’ என்ற நடனம் ஆடி மகிழ்ந்த வீடியோவைஅவர் ெவளியிட்டு இருந்தார்.

இந்த வீடியோவை கவுரி லங்கேஷ் பகிர்ந்து அதில் பதிலுக்கு கருத்து தெரிவித்து இருந்தார்.  அதில், “ கேரள மக்கள் ஓணம் பண்டிகையை மதவேற்றுமை இன்றி கொண்டாடி மகிழ்கிறார்கள். மதவேற்றுமை என்பது நசுக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் கேரளாவை மாநிலம் என்று கூறாமல் “நாடு’’ என்று கூறுகிறார்கள். அதான், “கடவுளின் சொந்த நாடு’’ என்று கூறுகிறார்கள் கவனித்தார்களா சேச்சி?(அக்கா).

என்னுடைய மலையாள நாட்டு நண்பர்களே உங்களின் மதச்சார்பின்மையை உணர்ச்சியை அழுத்தமாக பிடித்துக்கொள்ளுங்கள். அடுத்த முறை நான் கடவுளின் சொந்த நாட்டுக்கு, அதான் கேரளாவுக்கு வரும் போது, யாராவது மாட்டிறைச்சி வாங்கி கொடுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட சேதி அறிந்ததும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்அதிர்ச்சி அடைந்து டுவிட்டரில் செய்தி வௌியிட்டார். அதில், அவர் “ நான் இதுவரை கவுரி லங்கேஷ் யாரென்று எனக்கு தெரியாது. ஆனால், அவர் நான் வெளியிட்ட வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அதன்பின் சில மணிநேரங்களில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அரசியல்கொலை என்பது உச்சகட்ட தணிக்கையாகும்.  அவரின் பணியைச் செய்ததற்காக அவர் கொல்லப்பட்டுள்ளார். அவரின் மரணம் என்னை வேதனைப்படுத்துகிறது. பத்திரிகையாளர்களை துப்பாக்கி தோட்டாக்கள் மூலம் வாய்மூடச் செய்யும் நாடாக இந்திய இருந்தது இல்லை. கவுரியின் குரல் ஒலிக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

அரசு மரியாதையுடன் அடக்கம்...

மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் உடல் அரசு மரியாதையுடன் ்நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி, எம்.எல்.ஏ. பி.ஜமீர் அகமதுகான், நடிகர் பிரகாஷ் ராஜ், எழுத்தாளர்கள், கதாசிரியர்கள், நடிகர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். பெங்களூரில் உள்ளலிங்காயத் கல்லறையில் கவுரியின் இறுதிச் சடங்கு நடந்தது.