Government wont allow cash fees payments in universities colleges anymore

நாட்டில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழங்களில் கல்விக் கட்டணத்தை பணமாக செலுத்த மத்திய மனித வள ேமம்பாட்டு அமைச்சகம் தடை விதித்துள்ளது.

அதற்கு பதிலாக, கல்வி தொடர்பான அனைத்துக் கட்டணங்களையும் டிஜிட்டல்பேமெண்ட் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். இந்த உத்தரவு நடப்பு கல்வி ஆண்டில் இருந்தே நடைமுறைக்கு வருகிறது.

இந்த உத்தரவு தொடர்பாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், பல்கலைக்கழங்களுக்கும் முறைப்படியான வழிகாட்டி அறிவிக்கைகளை அனுப்ப பல்கலைக்கழ மானியக் குழுவுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வௌியிட்டஉத்தரவில் கூறியிருப்பதாவது-

மாணவர்கள் கட்டண், தேர்வுக் கட்டணம், பேராசிரியர், விரிவுரையாளர், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு ஊதியம் ஆகியவை அனைத்தும் டிஜிட்டல் பேமெண்ட் அல்லது ஆன்-லைன் மூலமே செலுத்தப்பட வேண்டும்.

மாணவர்கள் தங்களின் விடுதிக்கட்டணம், கேண்டீன், உணவு விடுதிக் கட்டணம், மற்றும் கல்லூரி, பல்கலையில் உள்ள அனைத்து வர்த்தக செயல்பாடுகளின் கட்டணமும் டிஜிட்டல் பேமென்ட் மூலமே இருக்க வேண்டும். அல்லதுமத்தியஅரசின் பிம் ஆப்ஸ் மூலமே நடக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளது.