Train Derail : மேற்கு வங்கத்தில் மீண்டும் பிரச்னை.. தடம்புரண்ட சரக்கு ரயில் - முழுவீச்சில் மீட்பு பணிகள்!
West Bengal : மேற்கு வங்கம் பகுதியில் ரயில் விபத்துகள் நடப்பது தொடர்கதையாக மாறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ரணகாட்டில், ஒரு சரக்கு ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களாகவே ரயில் விபத்துகள் தொடர்வதால், ரயில்வேயின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். நேற்று சனிக்கிழமையன்று, குஜராத் மற்றும் உ.பி.யில் சரக்கு ரயில்கள் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடந்த அந்த ரயில் விபத்தால், குறைந்தபட்சம் 28 பயணிகள் ரயில்களுக்கான வழித்தடங்கள் மாற்றிவிடப்பட்டன. ஏறக்குறைய ஆறு உள்ளூர் மற்றும் பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. அதன் பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் தான் அந்த வழித்தடத்தில் வழக்கமான ரயில் போக்குவரத்து தொடங்கியது.
நாய் வசிக்கும் இடத்தில் வாழும் புலம்பெயர் தொழிலாளி! அதிர்ச்சி அளிக்கும் கேரளாவின் அவல நிலை!
அதற்கு முன் உ.பி.யின் கோண்டாவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று தடம் புரண்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இப்பொது மீண்டும் மேற்கு வங்க பகுதியில் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும், மேற்கு வங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்க நடந்து வருகின்றது.
உ.பி.யில் மீண்டும் ரயில் விபத்து! அம்ரோஹாவில் சரக்கு ரயிலின் பல பெட்டிகளை தடம்புரண்டன!