உ.பி.யில் மீண்டும் ரயில் விபத்து! அம்ரோஹாவில் சரக்கு ரயிலின் பல பெட்டிகளை தடம்புரண்டன!
அம்ரோஹாவில் உள்ள கல்யாண்புரா ரயில்வே கேட் அருகே இந்த சரக்கு ரயில் தடம் புரண்டது. ரயிலின் பல பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த சம்பவத்தால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
லக்னோவில் இருந்து டெல்லிக்கு சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில், உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் சனிக்கிழமை தடம் புரண்டது. ரயிலின் பல பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகியதால் இந்த விபத்து நடந்துள்ளது.
அம்ரோஹாவில் உள்ள கல்யாண்புரா ரயில்வே கேட் அருகே இந்த சரக்கு ரயில் தடம் புரண்டது. ரயிலின் பல பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த சம்பவத்தால் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ரயில்வே அதிகாரிகள் பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
இந்த ரயில் விபத்தால் டெல்லி-லக்னோ ரயில் பாதை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
"சம்பவ இடத்தில் போதிய அளவுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளும் போலீசாரும் உள்ளனர். உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது" என்று அம்ரோஹா காவல்துறை கூறியுள்ளது.
வாஷிங் மிஷினுக்குள் நாகப்பாம்பு! நூலிழையில் உயிர் தப்பிய டெக்னீஷியன்!
சமீபத்தில், உத்தரப் பிரதேசத்தில் கோண்டா அருகே மோதிகஞ்ச் மற்றும் ஜிலாஹி ரயில் நிலையங்களுக்கு இடையில் சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் குறைந்தது 4 பயணிகள் உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரயில் தடம் புரள்வதற்கு முன், வெடிப்பு சத்தம் கேட்டதாக ரயிலின் டிரைவர் கூறினார் என்று தகவல் வெளியானது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
யார் இந்த கமலா பூஜாரி? நெல் ரகங்களை அழியாமல் காப்பாற்ற வாழ்க்கையை அர்ப்பணித்த மூதாட்டி!