Asianet News TamilAsianet News Tamil

"இனி வரப்போகுது கண்ணாடி ரயில்" - இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு..!!!

glass trains-like-switzerland
Author
First Published Oct 12, 2016, 12:41 AM IST


சுற்றுலா பயணிகளைக்  கவரும் வகையில் கண்ணாடிகளால் ஆன ரயிலை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

சுவிட்சர்லாந்து நாட்டில் இயங்கும் ரயில்களைப்  போல மேற்கூரை மற்றும் பயணிகளின் இருபுறங்கிலும் கண்ணாடிகள் அமைக்கப்பட்டு வெளிபுறங்களை பார்க்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. 

மேலும் இதில் சுழலும் நாற்காலி உள்ளிட்ட பல்வேறு அதிநவீன அம்சங்களும் இடம்பெறவுள்ளதாக IRCTC தலைவர் திரு. மனோச்சா தெரிவித்துள்ளார்.

பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையுடன் இணைந்து இந்த கண்ணாடி ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை வரும் டிசம்பர் மாதத்திற்குள் இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக  மனோச்சா  குறிப்பிட்டுள்ளார். இனி வரும் காலங்களில் பெட்டியின் மேற்கூரையை திறக்கும் வகையில் ரயில் பெட்டிகள்  வடிவமைக்கப்படவுள்ளதாகவும், ஒவ்வொரு ரயில் பெட்டியின் மதிப்பு ரூ.4 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கண்ணாடி ரயிலின்  முதல் சேவை ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் தொடங்கப்படும் என்றும், முதல் சோதனை ஓட்டம் இந்த மாதம் நடைபெறவுள்ளதாகவும்  ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.   

Follow Us:
Download App:
  • android
  • ios