திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் பேரக் குழந்தைகளை பெற்றுக் கொடுக்காத மகன் மற்றும் மருமகள் மீது ரூ.5 கோடி கேட்டு உத்தரகண்டைச் சேர்ந்த தம்பதி வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னமும் பேரக் குழந்தைகளை பெற்றுக் கொடுக்காத மகன் மற்றும் மருமகள் மீது ரூ.5 கோடி கேட்டு உத்தரகண்டைச் சேர்ந்த தம்பதி வழக்குத் தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில்,” எங்களது சொத்து அனைத்தையும் விற்று, முழு சேமிப்பு பணத்தையும் போட்டு எனது மகனை அமெரிக்கா அனுப்பில் படிக்க வைத்தோம். இன்று அவர் ஒரு சிறந்த பைல்ட் ஆக இருக்கிறார். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டும் ஆடம்பரமாக நிறைய பணம் செலவு செய்து, மகனுக்கு திருமணம் நடத்தி வைத்தோம். எங்களது சொந்த பணத்தில் தேன் நிலவிற்கு தாய்லாந்து அனுப்பி வைத்தோம்.
மேலும் படிக்க: IRCTC changes: பயணிகள் கவனத்துக்கு! ஐஆர்சிடிசி ஆன்-லைன் டிக்
ஆனால் திருமணம் ஆன சில நாட்களிலே மருமகளின் கட்டாயத்தின் பேரில் அவர்கள் ஹைதராபாத் சென்றுவிட்டனர். அதற்கு பிறகு, எங்களுடன் மகன், மருமகளின் தொடர்பு குறைந்துவிட்டது. மகனின் சம்பளம் முழுவதும் மருமகளின் பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. எங்களுக்கு எதுவும் செய்வதில்லை. அவர்களது உறவினர்களுக்கு மட்டுமே நன்கு செலவு செய்கிறார்கள். இப்பொழுது நாங்கள் கஷ்டத்தில் இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு உதவ யாரும் இல்லை.
பொருளாதார சிக்கலினால் கடன் வாங்கி தான் வீடு கட்டினோம். அதனால் தற்போது கடனை அடைக்க முடியாமல் அவதிப்படுகிறோம். எங்களது மகனுக்கு திருமணமான பிறகு விரைவில் குழந்தை பிறக்கும் என்று ஆசையாக காத்திருந்தோம். ஆனால் இதுவரை அதுக்குறித்து அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. பேத்தியோ பேரனோ எதுவாக இருந்தாலும் சரி.. ஒரு பேரக் குழந்தை வேண்டும் என்று கேட்கிறோம். இந்த ஆண்டுக்குள் ஒரு பேரக் குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்றும் இல்லையெனில் எங்களுக்கு அவர்கள் தலா ரூ.2.5
கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதுக்குறித்து அவர்களது வழக்கறிஞர் பேசுகையில்,” நிறைய பணம் செலவழித்து சிரமப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை, வளர்த்த பிறகு குழந்தைகள் நினைத்து கூட பார்ப்பதில்லை. மேலும் நன்கு படித்து பெரியவர்களாகி கைநிறைய சம்பாதிக்கும் பிள்ளைகள், பெற்றோரின் அடிப்படைத் தேவைகளைக் கூட கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். தற்போது பேரக் குழந்தைகளையாவது பெற்றுக் கொடுங்கள் இல்லையேல் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கொடுங்கள் என்று பெற்றோர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள் என்று பேட்டியளித்தார்.
மேலும் படிக்க: ஜூன் 10 மாநிலங்களவை தேர்தல்... ஜூன் 29ல் எம்.பி.க்களின் பதவிக்காலம் முடியும் நிலையில் அறிவிப்பு!!
