தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார், அதிமுகவின் எஸ் ஆர் பாலசுப்பிரமணியன், நவநீத கிருஷணன், விஜயகுமார் ஆகிய 6 எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதை அடுத்து காலியிடத்தை நிறுப்புவதற்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏக்கள் பலத்தைப் பொருத்து ஒரு மாநிலங்களவை எம்பி பதவிக்கு 34 அல்லது 36 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அந்த அடிப்படையில் திமுகவுக்கு 3 எம்பி பதவிகள், அதிமுகவுக்கு இரு எம்பி பதவிகள் கிடைக்கும். 6 ஆவதாக உள்ள எம்பி பதவியை காங்கிரஸ் திமுகவிடம் கேட்டு பெறும் என தெரிகிறது.

இந்த நிலையில் திமுகவில் 3 பதவிகள் யாருக்கு என்ற போட்டி இப்போதே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதே போல் ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் போட்டியிடும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த சீட்டை பெற தற்போது எம்பியாக உள்ள ஒருவர் இப்போதே காய் நகர்த்தி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பில் உள்ள இரு பதவிகள் யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த இரு பதவிகளுக்கு கோகுல இந்திரா, பொன்னையன், செம்மலை உள்ளிட்டோர் போட்டியிட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அவர்களோடு போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் ஜூன் 29 ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கும் ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.