மத்திய தொழில்பாதுகாப்பு படையின் கண்காணிப்பில் இருக்கும் டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காகவும், சில்மிஷங்களில் இருந்தது காத்துக்கொள்ளவும் சிறிய கத்தி கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்முறை

தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவமாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவங்களில் ஆண்டு தோறும் பெண்களுக்கு எதிராக வன்முறை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

டெல்லி முதலிடம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நடக்கும் நகரங்களில் டெல்லிதான் முதலிடத்தில் இருக்கிறது என்று தேசிய குற்ற ஆவண அமைப்பு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தது.

அனுமதி

இந்நிலையில், மத்திய தொழில்பாதுகாப்பு படையின் கண்காணிப்பில் இருக்கும் டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காகவும், சில்மிஷங்களில் இருந்தது காத்துக்கொள்ளவும் சிறிய கத்தி கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4-இன்ஞ் கத்தி

இதுகுறித்து மத்திய தொழில்பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மெட்ரோ ரெயிலில் செல்லும் பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக ‘4 இன்ஞ்’ அளவுக்கு குறைவுள்ள சிறிய கத்தியை தங்களின் கைப்பையில் எடுத்து வரலாம். இந்த சிறிய ரக கத்தியால் பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் இடையூறு ஏற்பட்டுவிடாது என்பதை அறிந்து அனுமதி கொடுத்து இருக்கிறோம். அதேசமயம், பெண்களின் பாதுகாப்பு மிகமுக்கியம் என்பதால் இந்த வசதியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளோம்'' எனத் தெரிவித்தார்.

தீப்பெட்டி, லைட்டர்

இதற்கிடையே மெட்ரோ ரெயலில் பயணிக்கும் தொழிலாளர்கள் தீப்பெட்டிகள், லைட்டர் இல்லாமல் பயணிக்கும் போது தங்களின் தொழில்களுக்கு இடைஞ்சல்கள் ஏற்படுவதாகத் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் ஒருவர் ஒரு தீப்பெட்டி அல்லது லைட்டர் மட்டும் எடுத்துவ அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.