MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • நாங்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டோமா?.. சபாநாயகர் புகாரால் கொந்தளித்த ஜோதிமணி.. பரபரப்பு விளக்கம்!

நாங்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டமிட்டோமா?.. சபாநாயகர் புகாரால் கொந்தளித்த ஜோதிமணி.. பரபரப்பு விளக்கம்!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள். பாஜகவைப் போல வன்முறை, கலவரத்தை நம்புகிறவர்கள் அல்ல. கோழைகள் தான் வன்முறையைக் கையில் எடுப்பார்கள். நாங்கள் வீர மங்கைகள். போராளிகள் என்று ஜோதிமணி கூறியுள்ளார். 

2 Min read
Author : Rayar r
Published : Feb 05 2026, 07:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பிரதமர் மோடியை தாக்க திட்டம்
Image Credit : our own

பிரதமர் மோடியை தாக்க திட்டம்

நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பகீர் குற்றச்சாட்டு கூறியிருந்தார். அதுவும் தமிழ்க காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சம்பவத்தை பிரதமருக்கு எதிராக திட்டமிட்டு இருந்ததாகவும் சபாநாயகர் கூறியுருந்தார்.

24
ஜோதிமணி விளக்கம்
Image Credit : Google

ஜோதிமணி விளக்கம்

சபாநாயகரின் குற்றச்சாட்டு மிகவும் அபத்தமானது என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''மாண்புமிகு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களின் குற்றச்சாட்டு அபத்தமானது.

 எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி இருதரப்பினரும் பேசவேண்டும். பிறகு பிரதமர் பதிலளிப்பார். இதுதான் வழக்கம். நடைமுறை.

ராகுல்காந்தி பேச்சுக்கு பயந்தனர்

ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பேச்சிற்குப் பயந்துகொண்டு அவரைப் பேசவிடாமல் பிரதமர், அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோர் தடுத்தனர். நான்கு நாட்களாக எதிர்க்கட்சி தலைவர் மக்களவையில் பேச முடியவில்லை. 

நேற்று ஒரு பாஜக எம்.பி யை முன்னாள் பிரதமர்களைப் பற்றி ஆபாசமாகவும், அறுவெறுப்பாகவும் பேச அனுமதிக்கின்றனர். இதுகுறித்து நாங்கள் சபாநாயகரைச் சந்தித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டோம்.

Related Articles

Related image1
எனது ஆட்சியில் இந்தியா டாப்.. நாட்டை பற்றி எதிர்க்கட்சிகளுக்கு கவலையில்லை.. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Related image2
3 பெண்களால் பயந்து ஓடிய தைரியமில்லாத மோடி..! அட்டாக் சீக்ரெட்டை உடைத்த பிரியங்கா காந்தி..!
34
சபையை நடத்துவது யார்?
Image Credit : ANI

சபையை நடத்துவது யார்?

நடந்த மாபெரும் தவறை சபாநாயகர் மறுக்கவில்லை. போய்விட்டு நான்கு மணிக்கு வாருங்கள் என்று சொன்னார். நாங்கள் மீண்டும் நான்கு மணிக்கு சென்றபோது" நான் அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளேன். அவர்களிடம் இருந்து இதுவரை பதில் வரவில்லை" என்று சொல்கிறார். அப்படியென்றால் சபையை நடத்துவது யார்?

இது பாஜகவின் கட்சி அலுவலகம் அல்ல

எதிர்கட்சியில் ஒருவர் கூட பேசாமல் பேச அனுமதிக்கப்படாமல் பிரதமர் எப்படி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசமுடியும்? ஆளுங்கட்சியினரே பேசிக்கொள்வதற்கு இது ஒன்றும் பாஜகவின் கட்சி அலுவலகம் அல்ல. நாடளுமன்றம். அங்கே எங்களுக்கும்- எதிர்க்கட்சியினருக்கும் பேசுவதற்கு உரிமை உள்ளது. அந்த உரிமைக்காகத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.

44
பிரதமர் பயந்து விட்டார்
Image Credit : Asianet News

பிரதமர் பயந்து விட்டார்

இதற்காக இந்தியா கூட்டணியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். நேற்றும், இன்றும் போராடினோம். நாளையும் போராடுவோம். சீனா தாக்குதல், இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் பைல் இவை குறித்த பயம் தான் பிரதமரை அவைக்கு வரவிடாமல் தடுத்தது. 

நாங்கள் அதுதொடர்பான பதாகைகளை கையில் ஏந்தியிருந்தோம். உறுதியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம். பிரதமர் எங்களை எதிர்க்கட்சியினரை எதிர்கொள்ளப் பயந்துகொண்டு தான் அவைக்கு வரவில்லை.

நாங்கள் போராளிகள்

இதை மறைக்க இப்பொழுது சபாநாயகரின் பின்னால் ஒளிந்துகொண்டு பெண் எம்.பிகள் மீது பழிபோடுவது வெட்கக் கேடானது. நாங்கள் அன்பையும், அமைதியையும், கண்ணியத்தையும் முன்னிறுத்துகிற காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள். பாஜகவைப் போல வன்முறை, கலவரத்தை நம்புகிறவர்கள் அல்ல. 

கோழைகள் தான் வன்முறையைக் கையில் எடுப்பார்கள். நாங்கள் வீர மங்கைகள். போராளிகள். உங்கள் கட்டுக் கதைகளுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். மக்களின் உரிமைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். உங்கள் பொய்க்கதைகளால் எங்களை முடக்க முடியாது'' என்று கூறியுள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய தேசிய காங்கிரஸ்
பிஜேபி
பாராளுமன்றம்
பிரதமர் மோடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
எனது ஆட்சியில் இந்தியா டாப்.. நாட்டை பற்றி எதிர்க்கட்சிகளுக்கு கவலையில்லை.. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Recommended image2
நிலக்கரி சுரங்கத்தில் கோர விபத்து.. 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியான பரிதாபம்!
Recommended image3
3 பெண்களால் பயந்து ஓடிய தைரியமில்லாத மோடி..! அட்டாக் சீக்ரெட்டை உடைத்த பிரியங்கா காந்தி..!
Related Stories
Recommended image1
எனது ஆட்சியில் இந்தியா டாப்.. நாட்டை பற்றி எதிர்க்கட்சிகளுக்கு கவலையில்லை.. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
Recommended image2
3 பெண்களால் பயந்து ஓடிய தைரியமில்லாத மோடி..! அட்டாக் சீக்ரெட்டை உடைத்த பிரியங்கா காந்தி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved