ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் ராட்சத கிரேன் கீழே விழுந்ததில் 10 பேர் பலியாகினர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் ராட்சத கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அங்கு சரக்குகளை கையாளும் 60 அடி உயரமுள்ள ராட்சத கிரேன் திடீரென சரிந்து கீழே விழுந்ததில் 10 பேர் பலியாகினர். பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.கே. மீனா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விபத்து குறித்து தகவலறிந்த குடும்பத்தினர் கப்பல் கட்டும் தளம் முன்பு குவிந்தனர். போலீசார் அனுமதி மறுத்ததால் உள்ளே இருக்கும் தங்களது குடும்பத்தினரின் நிலை குறித்து தெரியவில்லை என அவர்கள் கூறுகின்றனர். இதனிடையே கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

கடந்த 3 மாதங்களில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 3-வது தொழிற்சாலை விபத்தாக இது பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி. பாலிமர் ரசாயணத் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டத்தில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர் என்பதும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் கடந்த ஜூன் மாதத்தில் அங்குள்ள மருந்து தொழிற்சாலை ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்