உலக அளவில் ஸ்போர்ட்ஸ் சம்மந்தமான ஷூ மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனம் தான் பூமா. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்தி போலியான ஷூ விற்பனை செய்து வந்த ஆக்ராவை சேர்ந்த நிறுவனம் ஒன்று பிடிபட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் ஒரு வழக்கை விசாரித்து வந்தது, இதில் ஆக்ராவைத் தளமாகக் கொண்ட ஒரு ஷூ தயாரிக்கும் நிறுவனமானது, ஜெர்மானிய ஸ்போர்ட்ஸ் ஷூ தயாரிக்கும் நிறுவனமான பூமாவின் லோகோவை பயன்படுத்தி ஷூக்களை விற்று வந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதை எதிர்த்து டெல்லி நீதிமன்றத்தில் puma நிறுவனம் வழக்கு ஒன்றை பதிவு செய்தது. 

இந்நிலையில் அந்த ஆக்ராவை சேர்ந்த நிறுவனத்திற்கு அதிரடியான தீர்ப்பை வழங்கி உள்ளது உயர்நீதிமன்றம். வெளியான தீர்ப்பில் பூமா நிறுவனத்திற்கு அந்த ஆக்ராவை சேர்ந்த நிறுவனம் 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பிராண்டான PUMA, ஆக்ரா, உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி மற்றும் ஹரியானாவில் 'PUMA' குறியின் கீழ் பல்வேறு போலி தயாரிப்புகள் விற்கப்படுவதாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது. 

பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார்; கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சம் திருடிய மர்ம நபர்கள்

இதைத் தொடர்ந்து, PUMA வர்த்தக முத்திரையுடன் எந்தவொரு காலணிகளையும் விற்பனை செய்வதிலிருந்து அல்லது உற்பத்தி செய்வதிலிருந்து பிரதிவாதிக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும் இது குறித்து விசாரணை நடத்த உள்ளூர் கமிஷனரும் நியமிக்கப்பட்டார். எவ்வாறாயினும், பிரதிவாதி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க முடிவு செய்ததால், வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றம் நிரந்தர தடை உத்தரவை நிறைவேற்றியது. 

திரு. குமாருக்கு 'பூமா' முத்திரை அல்லது அது போன்ற ஏதேனும் அடையாளங்களைக் கொண்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதிலிருந்து தடை விதித்தது. கைப்பற்றப்பட்ட பொருட்களை ஜெர்மன் நிறுவனத்திடம் அழிவுக்காக வழங்குமாறு பிரதிவாதிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தரம் குறைந்த தயாரிப்புகளில் பிரதிவாதியால், 'பூமா' முத்திரை மற்றும் லோகோவைப் பயன்படுத்துவது பூமாவின் சட்டப்பூர்வ மற்றும் பொதுச் சட்ட உரிமைகளை மீறுவதோடு மட்டுமல்லாமல், அதன் பிராண்ட் ஈக்விட்டியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் உயர் நீதிமன்றம் மேலும் கூறியது.

"விபச்சாரம்.. ஒரு கூலான தொழில்" சலசலப்பை ஏற்படுத்திய பேச்சு - வறுத்தெடுக்கப்படும் Comedian விதுஷி ஸ்வரூப்!