"விபச்சாரம்.. ஒரு கூலான தொழில்" சலசலப்பை ஏற்படுத்திய பேச்சு - வறுத்தெடுக்கப்படும் Comedian விதுஷி ஸ்வரூப்!
இந்த மாறிவரும் உலகில் ஸ்டாண்ட்-அப் காமெடி என்பதும் மிகவும் அறியப்பட்ட ஒன்றாகவும், பலரால் ரசிக்கப்படும் ஒன்றாகவும் மாறி வருகின்றது என்று தான் கூறவேண்டும். மக்கள் பொதுவாக தங்கள் ஓய்வு நேரத்தில் ஸ்டாண்ட்-அப் காமெடி வீடியோக்களைப் பார்க்கிறார்கள்.
இணைய வழியில் இதை பார்ப்பவர்களை விட, நேரடியாக ஒரு அரங்கிற்கு சென்று, காமெடியன்கள் பேசும் பேச்சை கேட்கும் மக்களின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் ஒரு பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் பெரிய அளவில் வைரலாகி, மக்களின் கொடூர கோவத்திற்கும் ஆளாகியுள்ளார். 'விபச்சாரம்' என தலைப்பிடப்பட்ட அவரது ஒரு YouTube வீடியோவில் பல சர்ச்சையான விஷயங்களை பேசியுள்ளார்.
இதுகுறித்து வெளியான ஒரு கிளிப்பில், திருமதி. ஸ்வரூப் விபச்சாரத்தை "கூலான தொழில்" என்று முத்திரை குத்தி பேச துவங்குகிறார். அவர் அந்த தொழிலில் உள்ள "அனுபவம்" மற்றும் அது மற்றவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் பற்றி விவாதிக்கிறார். அவரது இந்த உணர்ச்சியற்ற கருத்துகள் இணையத்தில் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இணையவாசிகள் பலர், இணையத்தில் தற்பொழுது எல்லாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக ஸ்டாண்ட் அப் காமெடி என்கின்ற பெயரில் பலர் பேசும் சில விஷயங்கள் அருவருக்கத்தக்க வகையில் இருக்கிறது. அதேபோலத்தான் இந்த பெண் பேசிய இந்த விஷயங்களும் மிகவும் அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.
உண்மையில் பலர் இந்த தொழில் ஈடுபடுவதை மிகவும் கொடுமையான ஒன்றாக நினைத்து, தங்கள் குடும்பத்திற்காக இதுபோன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி பலரையும் அவமானப்படுத்துவது போல ஒரு பெண் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று இணையத்தில் பலரும் அந்த பெண்ணை சாடி வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதே நேரத்தில் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் சிலர் பேசுகின்றனர், இந்த தொழில் செய்பவர்களை பற்றி என்ன பேசினால் என்ன என்கிற அளவிற்கு விவாதங்கள் தற்பொழுது இணையத்தில் எழுந்துள்ளது.