தொடர்ந்து ஓரினசேர்க்கை வைத்துக்கொள்ள தொல்லைக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த 23 வயது இளைஞர், ராஜேஷ் என்பவரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் புனேவில் நடந்துள்ளது. படுகாயங்களுடன் ராஜேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம், புனே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் வர்தாக் (46). இவர் 23 வயது இளைஞருடன் ஹோமோ செக்ஸ் தொடர்ப்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இவர்கள் இரண்டு ஆண்டுகளாகவே இந்த உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

 இந்த நிலையில், ராஜேஷ், இளைஞர் தங்கியுள்ள இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் இருவரும் செக்ஸ் வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ராஜேஷ் வர்தாக் மறுநாள் காலையும் செக்ஸ் வேண்டும் என்று அந்த இளைஞரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர்  மறுத்ததாக கூறிவிட்டார். ஆனாலும், அந்த இளைஞருக்கு ராஜேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், ராஜேஷை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.