மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப அவ்வப்போது  சிலிண்டர்களின் விலையை அவ்வப்போது உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன.

கிட்டத்தட்ட கடந்த ஓராண்டுக்கும் மேலாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஜிவ்வென உயர்ந்து வந்தது. இதனால் பொது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இதே போல் மானியத்துடன் கூடிய எரிவாயு சிலிண்டரின் விலையும் மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டருக்கு ரூ. 5.91 குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ளன. 

இதேபோல், மானியம் இல்லா சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.120.50 குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் 2-வது முறையாக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த டிசம்பர் 1-ம் தேதி மானியத்துடன் கூடிய சிலிண்டர் விலை ரூ.6.52- குறைக்கப்பட்டது.

ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ந்து 6 மாதமாக அதிகரித்து வந்த சிலிண்டர் விலை, இந்த மாதத்தில் இருமுறை குறைக்கப்பட்டுள்ளது  பொது மக்களிடையே பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.