ஐரோப்பாவுடன் மத்திய கிழக்கு, இந்தியாவை இணைக்கும் மெகா திட்டம்; ஜி20 மாநாட்டில் கையெழுத்தாகிறதா?
ஐரோப்பாவுடன் மத்திய கிழக்கு நாடுகள், இந்தியாவை இணைக்கும் வகையில் மெகா ரயில் மற்றும் துறைமுகத் திட்டத்தைக் கட்டமைக்க G20 உடன்படிக்கையில் அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் பிற நாடுகள் கையெழுத்திடும் என்று அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபைனர், "கப்பல் மற்றும் ரயில் போக்குவரத்தை (திட்டம்) ஆராய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். இது இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பாவிற்கு வர்த்தகம், எரிசக்தி செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.
இந்தத் திட்டத்தில் சவுதி அரேபியா மற்றும் இந்தியா முக்கிய உறுப்பு நாடுகளாக இருக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை திட்டத்தில் முக்கிய பங்கேற்பாளர்களாக இருப்பார்கள். இது பல மாதங்களாக கவனமான ராஜதந்திரம், இருதரப்பு மற்றும் பலதரப்பு விவாதங்களுக்குப் பின்னர் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது மகத்தான ஆற்றலைக் கொண்ட திட்டம் என்றாலும், முடிப்பதற்கு எவ்வளவு நாட்கள் எடுக்கும் என்பது எனக்குத் தெரியாது'' என்று ஃபைனர் செய்தியாளர்களிடம் டில்லியில் தெரிவித்தார்.
கொரோனாவை நம்மால் வெல்ல முடியும் என்றால் இதையும் வெல்ல முடியும் : ஜி20 மாநாட்டில் பிரதமர் பேச்சு
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுடன் இணக்கமாக செல்வதற்கும், இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கு ஊக்கமளிக்கிறது என்ற கருத்து எழுந்துள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் போர் தொடர்பாக G20 தலைவர்கள் பிளவுபட்டுள்ளனர். இதனால், கரியமில வாயுவைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டுவதிலும் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.