கொரோனாவை நம்மால் வெல்ல முடியும் என்றால் இதையும் வெல்ல முடியும் : ஜி20 மாநாட்டில் பிரதமர் பேச்சு

கோவிட்-19ஐ நாம் தோற்கடிக்க முடியும் என்றால் உலகளவில் போரினால் ஏற்பட்ட நம்பிக்கையின்மையையும் நாம் வெற்றிகொள்ள முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

If we can beat covid we can also beat trust deficit caused by war pm modi in G20 summit Rya

உலகின் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான  ஜி20 அமைப்பின்  வருடாந்திர ஜி20 உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்கி உள்ளது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டுப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு வருகை தந்த உலக தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். ஒரே பூமி, ஒரு குடும்பம் மற்றும் ஒரு எதிர்காலம் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி முன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஜி 20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், " ஜி20 மாநாட்டை தொடங்கும் முன், மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் குறித்து இரங்கல் தெரிவிக்க விரும்புகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.

Bharat: இந்தியா கிடையாது.. 'பாரத்'.. ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி அமர்ந்துள்ள பகுதிக்கு பெயர் மாற்றம் !!

இன்று, ஜி 20 தலைமை தாங்குகிறது என்ற முறையில், நம்பகத்தன்மையுடன் கூடிய உலகமாக மாற்ற இந்தியா உலக நாடுகளை ஒன்றிணைக்கிறது. நாம் அனைவரும் ஒன்றாகச் செல்ல வேண்டிய நேரம் இது. வடக்கு - தெற்கு இடையிலான பிளவு, கிழக்கு - மேற்கு இடையிலான தூரம், உணவு மற்றும் எரிபொருள் மேலாண்மை, பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி அல்லது நீர் பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும், எதிர்கால சந்ததியினருக்கு நாம் இதற்கு உறுதியான தீர்வைக் காண வேண்டும்.

21 ஆம் நூற்றாண்டு உலகிற்கு ஒரு புதிய திசையை காட்ட ஒரு முக்கியமான நேரம். பழைய பிரச்சனைகளுக்கு புதிய தீர்வுகளை தேடும் நேரம். கோவிட்-19ஐ நாம் தோற்கடிக்க முடியும் என்றால் உலகளவில் போரினால் ஏற்பட்ட நம்பிக்கையின்மையையும் நாம் வெற்றிகொள்ள முடியும்

இந்தியாவின் ஜி 20 தலைமையானது, நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களின் அடையாளமாக மாறியுள்ளது. இது இந்தியாவில் மக்களின் ஜி 20 ஆக மாறியுள்ளது. கோடிக்கணக்கான இந்தியர்கள் இதில் இணைந்துள்ளனர். நாட்டின் 60 க்கும் மேற்பட்ட நகரங்களில், மேலும் 200 கூட்டங்கள் நடந்துள்ளன. ஆப்பிரிக்க யூனியனுக்கு ஜி20யில் நிரந்தர உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என்று இந்தியா முன்மொழிந்தது. இந்த முன்மொழிவுக்கு நாங்கள் அனைவரும் உடன்படுகிறோம் என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios