மாங்காய் ஊறுகாய் முதல் திருவாதிரை களி வரை.. இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 Recipes லிஸ்ட்..
2023-ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 ரெசிபிகளின் பட்டியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
2023-ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட செய்திகள், படங்கள், உணவு வகைகள் அடங்கிய பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டின் பிரபலமான தேடல்கள் குறித்த வருடாந்திர அறிக்கையான 2023 ஆம் ஆண்டின் தேடலை கூகுள் வெளியிட்டது. அதில் மாங்காய் ஊறுகாய் முதலிடத்தை பெற்றுள்ளது, இதே போல் பஞ்சாமிர்தம், தனியா பஞ்சிரி, காரஞ்சி, திருவாதிரை களி, உகாதி பச்சடி, கொழுக்கட்டை மற்றும் ரவா லட்டு போன்ற பண்டிகை உணவுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 ரெசிபிகளின் பட்டியல் இதோ
1. மாங்காய் ஊறுகாய்
இந்தியாவில் மாங்காய், மாம்பழங்களுக்கான மோகம் எப்போதுமே குறையாது.. மாம்பழங்களை பலரும் விரும்பி சாப்பிட்டாலும், மாங்காய் பலரின் ஃபேவரைட் ஆகும். மாங்காய் பச்சடி, உப்பு மாங்காய், மாங்காய் ஊறுகாய் வரை எண்ணற்ற உணவுகளை செய்து சாப்பிடுகின்றனர். எனவே இந்த ஆண்டு மாம்பழ ஊறுகாய் செய்முறை இந்தியாவில் அதிகம் தேடப்பட்டதில் ஆச்சரியமில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
2. செக்ஸ் ஆன் தி பீச் (Sex on the beach)
இனிப்பு மற்றும் கசப்பான சுவை கொண்ட இந்த காக்டெய்ல் ரெசிபியை அதிகமானோர் இந்தியாவில் தேடி உள்ளனர். இந்த பானம் 1987 ஆம் ஆண்டில் புளோரிடாவில் உள்ள கான்ஃபெட்டிஸ் பாரில் ஒரு மதுக்கடைக்காரரால் உருவாக்கப்பட்டது. அவர் ஒரு பழ வகை காக்டெய்லை உருவாக்கி அதற்கு செக்ஸ் ஆன் தி பீச் என்று பெயரிட்டார். இந்த நிலையில் கூகுளின் தேடல் பட்டியலில், இந்த ரெசிபி 2வது இடத்தைப் பிடித்தது
3. பஞ்சாமிர்தம்
பஞ்சாமிர்தம் என்பது இந்தியாவில் புனிதமான உணவாகும். பால், தயிர், நெய், தேன் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பஞ்ச பொருட்களால் ஆனது. இது முதலில் தெய்வங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது, பின்னர் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படும் பஞ்சாமிர்தம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ரெசிபி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. .
4. ஹகுசாய்
ஹகுசாய் என்பது சீன உணவாகும். இது நாபா முட்டைக்கோஸ், கேரட், உப்பு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. நாபா முட்டைக்கோஸ் என்பது சீன முட்டைக்கோஸ் ஆகும், இது பெய்ஜிங்கிற்கு அருகில் தோன்றியது மற்றும் கிழக்கு ஆசிய உணவு வகைகளில் மிகவும் பிரபலமானது. நாபா முட்டைக்கோஸ் பாரம்பரிய கொரிய உணவான கிம்ச்சி தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹகுசாய் உணவு இந்தியாவில் 2023-ல் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
5. தனியா பஞ்சிரி
இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பண்டிகை மற்றும் விரதத்தின் போது தானியா பஞ்சிரி உணவு செய்யப்படுகிறது. குறிப்பாக விரதம் இருக்கும் போது இதனை உணவாக உட்கொள்கின்றனர். இதில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, எனவே இவை விரதத்தின் போது உடலுக்கு எரிபொருளாக இருக்கும். இதை தயாரிக்க, வறுத்த மக்கானா உடன் கொத்தமல்லி தூள், துருவிய தேங்காய், சர்க்கரை / வெல்லம் மற்றும் உலர் பழங்களுடன் சேர்த்து தயாரிக்கபப்டுகிறது..
சந்திரயான் முதல் ஒடிசா ரயில் விபத்து வரை.. 2023-ல் அதிகம் தேடப்பட்ட செய்திகள் லிஸ்ட் இதோ..
6. கரஞ்சி
விநாயகர் சதுர்த்தி, தீபாவளி மற்றும் ஹோலி போன்ற பண்டிகைகளின் போது செய்யப்படும் ஒரு இனிப்பு வகை தான் கரஞ்சி.. மைதா மாவு, ரவை மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படும், கரஞ்சியில் வறுத்த காய்ந்த தேங்காய், பருப்புகள் மற்றும் விதைகள், தூள் சர்க்கரை அல்லது வெல்லம் ஆகியை சேர்க்கப்படுகிறது.
7. திருவாதிரை களி
திருவாதிரை என்பது தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளுடன் திருவாதிரை நட்சத்திரம் இணைந்து வரும் போது திருவாதிரை திருநாளாகும். இந்த நாளில் திருவாதிரை களி, கூட்டு செய்து சிவபெருமானை வழிபடுவது வழக்கம். பச்சரிசி ரவை, வெல்லம், நெய், தேய், பாசி பருப்பு ஆகியவை சேர்ந்து இந்த திருவாதிரை களி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளில் திருவாதிரை களி 7-வது இடத்தில் உள்ளது.
8. உகாதி பச்சடி
இந்த உணவு ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் பிரபலமானது. தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி நாளில் தயாரிக்கப்படும் இது இனிப்பு, புளிப்பு, உப்பு, காரமான, கசப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளை கொண்டிருக்கும். வேப்பம்பூக்கள், பச்சை மாம்பழம், வெல்லம், மிளகுத் தூள், தேங்காய் மற்றும் உப்பு ஆகியவற்றைக் கொண்டு இது தயாரிக்கப்படுகிகிறது. இந்த உகாதி பச்சடி 2023-ல் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
9. கொழுக்கட்டை
விநாயக சதுர்த்தியின் போது தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான இனிப்பு வகை தான் இந்த கொழுக்கட்டை. தேங்காய், வெல்லம், எள்ளு ஆகியவற்றை பூரணமாக செய்து, அதை பச்சரிசி மாவில் கொழுக்கட்டையாக பிடித்து வேகவைத்து செய்யப்படுகிறது. தமிழ்நாடு, கேரளாவில் பிரபலமான உணவான கொழுக்கட்டை இந்த ஆண்டின் அதிகம் தேடபப்ட்ட உணவுகளில் 9-வது இடத்தில் உள்ளது..
10. ரவா லட்டு
பண்டிகை காலங்களில் சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில் ரவா லட்டு முக்கியாமந்து. ரவை, நெய், சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு எளிய தயாரிப்பாகும். இந்த கலவையை உருண்டையாக பிடித்து லட்டு போல் செய்யப்படுகிறது. இந்த ரவா லட்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளில் 10-வது இடத்தில் உள்ளது.