From The India Gate: காங்கிரஸின் தேர்தல் டார்கெட்டும் பாஜகவின் ராஜஸ்தான் ராணியும்

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக ‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 37வது எபிசோட்.

From The India Gate: Congress goal for Lok sabha Election and The Queen of Rajasthan

எதிர்க்கட்சியின் கோஷம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருந்து சன்சாத் டிவியில் நேரலையில் ஒளிபரப்பப்பட்ட விவாதங்களை விட, கேமராவில் தென்படாத காட்சிகள் உண்மையான அரசியல் நிலையை வெளிப்படுத்துகின்றன.

உதாரணமாக, நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின்போது, தி.மு.க.வின் எதிர்முழக்கத்தை மிகத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
சோனியா காந்தி அமர்ந்தபடியே, தன் கட்சிக்காரர்களை கூச்சலிடவோ, உட்காரவோ, வெளிநடப்பு செய்யும்படியோ சைகை காட்டுவார் என்பது இரகசியமல்ல. ஆனால் 2வது வரிசையில் சோனியாவுக்கு அடுத்தபடியாக, அமர்ந்திருந்த கனிமொழி சோனியாவையும் மீறி கவனத்தை ஈர்த்தார்.

பிரதம மந்திரியும் மற்றவர்களும் பேசும்போது, அவர் அடிக்கடி முதல் வரிசையில் அமர்ந்திருந்திருக்கும் தயாநிதி மாறனை பின்னால் இருந்து தூண்டிவிடுவார். உடனே மாறன் எழுந்து நின்று கோஷம் போடுவார். இப்படி அவர் பின்னால் அமர்ந்திருக்கும் நடத்துனரால் வழிநடத்தப்படுவதைக் காண முடிந்தது.

இருப்பினும் சோனியா காந்தி எதிர்க்கட்சிகளின் முடிசூடா ராணியாகத் தொடர்கிறார். கனிமொழியாக இருந்தாலும் சரி, சுப்ரியா சுலேயாக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் எந்த எதிர்க் கட்சியாக இருந்தாலும், அவரது இடத்தைப் பிடிப்பது கடினம்.

தோடர் பழங்குடியின மக்களுடன் ராகுல் காந்தி உற்சாக நடனம்!

ராஜஸ்தான் ராணி யார்?

கடந்த வாரம், ராஜஸ்தான் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டத்தை பாஜக கூட்டியது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக எம்.பி.யாக இல்லாத ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த பெண் தலைவர் ஒருவர் டெல்லிக்கு பிரத்யேகமாக அழைக்கப்பட்டார்.

கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இருவர் மாநாட்டில் அவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியனர். பின்னர் இரு தலைவர்களும் சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியேறினர். இப்போது அந்தச் சந்திப்பு பற்றிய வதந்திகள் பரவத் தொடங்கின.

ராஜஸ்தான் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அந்தப் பெண் தலைவர் அங்கு முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற ஊகம் வலுப்பெற்றுள்ளது. கெலாட் அரசாங்கம் தொடங்கியுள்ள பல நலத்திட்டங்களை எதிர்கொள்ள பாஜகவுக்கு வலுவான முதல்வர் வேட்பாளர் ஒருவர் தேவைப்படுகிறார்.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் கிடைக்குமா? விற்பனை தொடங்குவது எப்போது?

இலக்கு 20

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மூன்று வலுவான தலைவர்களுக்கு ராகுல் காந்தி ஒரு சவாலான பணியை அளித்துள்ளார். கர்நாடகாவில் இருந்து குறைந்தபட்சம் 20 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று மாநிலத் தலைவர்களுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.

கட்சி தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால், 10 இடங்களைக்கூட பெறுவதுகூட சவாலானதாக மாறிவிடும் என்பதையும் வலியுறுத்தியுள்ள ராகுல், ஒருங்கிணைந்து செயல்படுமாறு கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் டெல்லி அரசியலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் ஆற்றலை நிரூபிக்கவும் இந்த 20 அவசியம். முதல்வர் ஆசையில் இருக்கும் டி.கே.சிவகுமாரின் நிலையை வலுப்படுத்தவும் இந்த 20 தேவை. மேலும், சித்தராமையா மக்களவைக்கும் வாக்குகளைப் பெறுவதில் தனது செல்வாக்கைப் பயன்படுத்துவது முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத விஷயம்.

இந்த முயற்சிக்கு, இவர்கள் பிரிவுகளை மறந்து ஒருங்கிணைத்து இணக்கமாக ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

வேற மாதிரி ஸ்டைலில் புதிய ஜியோ ஸ்மார்ட்போன்கள்! AI கேமரா மூலம் செம குவாலிட்டி போட்டோஸ் கேரண்டி!

சதமடித்தால் சக்சஸ்

காங்கிரஸ் கட்சி அதன் வீரர்களுக்கு வழங்கியிருக்கும் இலக்கு, 2024இல் சதம் அடிப்பதுதான். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் உயர்நிலைக் குழு மாநிலத் தலைவர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.

இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து அனுதாப அலையின் பயனை அறுவடை செய்த காங்கிரஸ் 1984 இல் 400 இடங்களைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. ஆனால் ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் நிலை அதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் பாஜகவை எதிர்கொள்கிறது.

டெல்லியில் அரசியல் சூழலை மாற்றியமைக்க காங்கிரஸ் காவி கட்சிக்கு எதிராக நேரடியாக போட்டியிடும் மாநிலங்களில் அதிக வெற்றியை உறுதிசெய்ய வேண்டும். கூட்டணியாக போராட்டத்தை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ், இந்த போட்டியில் வெற்றி பெற சதம் அடிக்கவேண்டியது கட்டாயத்தில் உள்ளது. சதத்தை எட்டத் தவறினால், கட்சி கூட்டணியில் உள்ள பிற கட்சிகளிடம் பேரம் பேசக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்படும். இந்தக் கணக்கு அக்கட்சியின் களத்தில் இருக்கிற மற்றும் இல்லாத கேப்டன்களுக்கும் நன்றாகவே தெரியும்.

ஆயிரம் 5 லட்சமாக மாறும்! ஆண்களுக்கு மட்டும் அஞ்சல் துறை வழங்கும் பொன்மகன் சேமிப்புத் திட்டம்!

கைபடதா லஞ்சம்

கேரளாவில் யுடிஎப் தலைவர்கள் நடத்திய சமீபத்திய செய்தியாளர் சந்திப்பைப் பாருங்கள். முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கும், கொச்சி மினரல்ஸ் நிறுவனத்துக்கும் இடையே நிதிப் பரிவர்த்தனை நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பாதது ஏன் என முன்னணியின் அனைத்து முக்கியத் தலைவர்களும் சட்டசபையில் விளக்கமளிக்க முடியாமல் திணறினர்.

வருமான வரித்துறை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் ஆவணங்களில் வீணாவின் நிறுவனத்திற்கு ரூ.1.72 கோடி செலுத்தப்பட்ட விவரங்கள் இருந்தன. இந்த பணம் அந்த நிறுவனத்துக்குச் செலுத்தப்பட்டதற்கு எந்த நியாயமும் இல்லை என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமைதி காக்கின்றன. காங்கிரஸ், முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள அனைத்து தலைவர்களின் மௌனமாக இருப்பதற்கான காரணம் எளிமையானது. இது சுட்டிக்காட்டப்பட்டபோது, முஸ்லீம் லீக் தலைவர் பி. கே. குன்ஹாலிக்குட்டி கட்சி சார்பில் பணம் பெற்றதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், “அந்தப் பணத்தை நான் என் கைகளால் தொட்டதில்லை. தயவு செய்து கவனியுங்கள், என் கைகளால் தொடவேயில்லை'' என்று குன்ஹாலிக்குட்டி வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் வி. டி. சதீசன் மிகவும் வித்தியாசமான நியாயத்தைக் கூறினார்: “கொச்சி மினரல்ஸ் உரிமையாளர்கள் கடத்தல்காரர்கள் அல்ல. அப்படியானால் அவர்களிடமிருந்து நிதியுதவி அல்லது நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு? இவ்வளவு நிதி இல்லாமல் நாங்கள் எப்படி அரசியல் கட்சி நடத்துவோம் என்று நினைக்கிறீர்கள்?’’

கொச்சி மினரல்ஸ் நிறுவனம் இல்மனைட் சுரங்க குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளது. பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை நிறுவனத்தை சோதனையிடும் வரை எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இதன் க்ளைமாக்ஸ் புது மாதிரியாக இருந்தது. வரலாற்றில் முதன்முறையாக, சிபிஎம் இந்த ஒப்பந்தத்தையும் வீணா விஜயனையும் ஆதரித்து அறிக்கை வெளியிட்டது. அது இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்றும், தேவையில்லாமல் முதல்வர் பெயரை ஊடகங்கள் இழுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 எடுத்த நிலவின் குளோஸ்-அப் தோற்றம்! இஸ்ரோ வெளியிட்ட பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios