தோடர் பழங்குடியின மக்களுடன் ராகுல் காந்தி உற்சாக நடனம்!
ராகுல் காந்தி தோடர் பழங்குடியினருடன் பாரம்பரிய நடனத்தில் பங்கேற்று ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் பாரம்பரிய சால்வை அணிந்து உள்ளூர் மக்களுடன் வட்டமாக நின்று நடனமாடுகிறார்.
தமிழகத்தின் ஊட்டி அருகே உள்ள முத்துநாடு கிராமத்தில் தோடர் பழங்குடியினருடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. சனிக்கிழமை ராகுல் காந்தி கேரளா மற்றும் தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டார். மக்களவையில் எம்.பி.,யாக மீண்டும் பொறுப்பேற்ற பின், முதல் முறையாக கேரளாவில் உள்ள தன் சொந்தத் தொகுதியான வயநாடுக்கும் அவர் சென்றார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஊட்டியில் முத்தநாடுமந்து பழங்குடி கிராமத்தில் உள்ள தோடர் பழங்குடியின மக்களைச் சந்தித்த ராகுல் காந்தி அந்த மக்களுடன் பாரம்பரிய நடனத்தில் பங்கேற்று ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது. பாரம்பரிய சால்வை அணிந்து உள்ளூர் மக்களுடன் வட்டமாக நின்று நடனமாடுகிறார்.
சந்திரயான்-3 எடுத்த நிலவின் குளோஸ்-அப் தோற்றம்! இஸ்ரோ வெளியிட்ட பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்!
பின்னர் மாலையில் கேரளாவின் வயநாடு தொகுதிக்குச் சென்ற ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு ராகுல் காந்தி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்துகொண்டார். தொடர்ந்து இன்றும் ராகுல் காந்தி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார் என கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் வி.டி.சித்திக் கூறியுள்ளார்.
கேரளா மற்றும் தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்திற்கு பிறகு ராகுல் காந்தி ஐரோப்பா பயணத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்குச் சென்று பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாட உள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், அந்த நாடுகளில் வாழும் இந்திய சமூகத்தினருடனும் உரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இந்தப் பயணத்திற்குப் பின் குஜராத்தில் இருந்து மேகாலயா வரை இரண்டாம் கட்ட பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்வார் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியிருக்கிறார்.
ஆயிரம் 5 லட்சமாக மாறும்! ஆண்களுக்கு மட்டும் அஞ்சல் துறை வழங்கும் பொன்மகன் சேமிப்புத் திட்டம்!