குமரகம் முதல் தனுர் வரை: இதுவரை கேரளாவை உலுக்கிய பெரும் படகு விபத்துகள்..

மலப்புரத்தில் நடந்த படகு விபத்து அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், கேரளாவில் கடந்த காலங்களில் நடந்த மற்ற பெரிய படகு விபத்துகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்:

From Kumarakam to Thanur: Major boat accidents that have rocked Kerala so far..

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு படகு விபத்துக்குள்ளான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் இதுபோன்ற பயங்கர விபத்துகள் ஏற்பட்டு பலரது உயிரை பறிப்பது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் நடந்த மற்ற பெரிய படகு விபத்துகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்:

பலனா (1924)

பலனா படகு விபத்டிஹ்ன் விளைவாக கேரளா தனது புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான மகாகவி குமரன் ஆசானை இழந்தது. 1924 ஆம் ஆண்டு கொல்லத்திலிருந்து கோட்டயம் நோக்கிப் பயணித்த படகு பலனா கடற்கரையில் மூழ்கியதில் உயிரிழந்த 24 பேரில் இவரும் ஒருவர். 95 பேர் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் படகில் 151 பயணிகள் இருந்தனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் பெரிய படகு விபத்து ஆகும்.

கண்ணமல்லி (1980)

கொச்சியில் உள்ள கண்ணமல்லியில், 1980 ஆம் ஆண்டு தேவாலய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 29 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க : கேரளா படகு விபத்து.. தமிழக அரசுக்கு நாராயணன் திருப்பதி எச்சரிக்கை.. எதுக்காக தெரியுமா?

குமரகம் (2002)

பிரபலமான சுற்றுலாத் தலமான குமரகம் ஜூலை 27, 2002 அன்று மிகப்பெரிய விபத்தை சந்தித்தது. ஆலப்புழாவில் இருந்து புறப்பட்ட A53 படகு வேம்பநாடு ஏரியில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்தனர். 

தட்டேகாட் (2007)

2007ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி நடந்த படகு விபத்தில், எளாவூர் புனித அந்தோணியார் பள்ளியிலிருந்து சுற்றுலா சென்ற 15 குழந்தைகள் மற்றும் 3 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். படகில் அதிகபட்சமாக 6 பேர் மட்டுமே பயணிக்க முடியும், ஆனால் அதில் 61 பேர் இருந்ததாக பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அன்றைய தினமே அப்படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

தேக்கடி (2009)

செப்டம்பர் 30, 2009 அன்று முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தின் ஆழமான பகுதியில் ஜலகன்யாகா என்ற இரட்டை அடுக்கு பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 45 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். படகில் 80க்கும் மேற்பட்டோர் இருந்தனர். படகில் அதிகபட்சம் 75 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும், 87 பேர் இருந்தனர். மேலும் பயணிகளுக்கு எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் வழங்கப்படவில்லை. படகின் தலைவரான விக்டர் சாமுவேல் மற்றும் மற்றொரு பணியாளர் கைது செய்யப்பட்டனர்.

தனுர் (2023)

மே 7 அன்று மலப்புரம் மாவட்டம் தனுர் அருகே தூவல் தீரம், ஒட்டுபுரம் என்ற இடத்தில் சதுப்புநிலப் பகுதியில் இரட்டை அடுக்கு பொழுது போக்குப் படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீரில் மூழ்கிய 20 பேரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க : கேரள படகு விபத்து: ரூ.10 லட்சம் நிதியுதவி.. நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட கேரள முதலமைச்சர்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios