ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 4 கோடி பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை... பிரதமர் மோடி பெருமிதம்!!
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 4 கோடி ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 4 கோடி ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். அங்கு உலகின் முதல் சிஎன்ஜி டெர்மினலுக்கு பாவ்நகரில் அடிக்கல் நாட்டுகிறார். அதுமட்டுமின்றி 36 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளை அவர் தொடங்கி வைக்கிறார்.
இதையும் படிங்க: ‘ஆணுறையும் சேர்த்துக் கேட்பிங்களா’! மாணவியின் கேள்விக்கு அநாகரீகமாக பதில் அளித்த பீகார் ஐஏஎஸ் அதிகாரி
பின்னர் அம்பாஜி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு வசதியாக அகல ரயில் பாதைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் தற்போது சூர்த் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ரூ.3,400 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தியைச் சந்தித்ததும் மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு கதறிய சிறுமி: வைரல் வீடியோ
அப்போத் பேசிய அவர், சூரத்தில் ஏழை மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 80,000 வீடுகள் கட்டிக்கொடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 4 கோடி ஏழை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை கிடைத்துள்ளது. அதில் 32 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். சூரத்தில் பயனடைந்தவர்கள் சுமார் 12.5 லட்சம் பேர். இந்தியா முழுவதிலும் உள்ளவர்கள் சூரத்தில் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட இது ஒரு மினி இந்தியா என்று தெரிவித்துள்ளார்.