‘ஆணுறையும் சேர்த்துக் கேட்பிங்களா’! மாணவியின் கேள்விக்கு அநாகரீகமாக பதில் அளித்த பீகார் ஐஏஎஸ் அதிகாரி
பீகாரில் பள்ளி மாணவியிடம், இலவசமாக நாப்கின் கொடுத்துட்டோம், இனிமேல் காண்டம்(ஆணுறை) சேர்த்துக் கேட்பிங்களோ என்று அநாகரீகமாக கேள்வி கேட்ட ஐஏஎஸ் பெண் அதிகாரி விளக்கம் அளி்க்க தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பீகாரில் பள்ளி மாணவியிடம், இலவசமாக நாப்கின் கொடுத்துட்டோம், இனிமேல் காண்டம்(ஆணுறை) சேர்த்துக் கேட்பிங்களோ என்று அநாகரீகமாக கேள்வி கேட்ட ஐஏஎஸ் பெண் அதிகாரி விளக்கம் அளி்க்க தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பீகார் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநராக இருக்கும் ஹர்ஜோத் கவுர் பாம்ரா என்பவர்தான் மாணவியிடம் அசிங்கமான இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார். 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் தேசிய மகளிர் ஆணையம் கெடு விதித்துள்ளது.
ராகுல் காந்தியைச் சந்தித்ததும் மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு கதறிய சிறுமி: வைரல் வீடியோ
பாட்னா நகரில் அரசு, யுனிசெப் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் “ பீகார் மகள்கள், வளர்ச்சி பீகார்” என்ற தலைப்பில் பயிற்சிப்பட்டறை செவ்வாய்கிழமை நடந்தது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநராக இருக்கும் ஹர்ஜோத் கவுர் பாம்ரா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் குடிசைவாழ் பகுதியைச் சேர்ந்த ஒரு ஏழை மாணவி மேடையில் ஏறி, ஹர்ஜோத் கவுரிடம் “ அரசு சார்பில் தற்போது எங்களுக்கு சீருடை, உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. ரூ.20 முதல் 30ரூபாய்க்குள் சானடரி நாப்கின்கள் வழங்கப்படுமா” என்று கேட்டார்.
ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 22ம் தேதி விசாரணை
அதற்கு ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் “ நாளை நீங்கள் இலவசமாக அரசிடம் ஜீன்ஸ் பேண்ட் கேட்பீர்கள். அதன்பின் ஏன் எங்களுக்கு அழகான ஷீ வழங்கக்கூடாது என்று கேட்பீர்கள். இறுதியில் அரசு உங்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு முறை, ஆணுறைகூட வழங்கும் என எதிர்பார்ப்பீர்கள்” எனத் தெரிவித்தார்
அதற்கு அந்த மாணவி “ மக்களின் வாக்குகள்தான் அரசாங்கத்தை உருவாக்குகிறது” என்றார்.
அப்போது பதில் அளித்த கவுர், “ இது முட்டாள்தனத்தின் உச்சம். அப்படியென்றால் வாக்களிக்க வேண்டாம், பாகிஸ்தானாக மாறிவிடும், பணத்துக்காக சேவைக்காகவா வாக்களிக்கிறீர்கள் ” எனத் தெரிவித்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதைத் தொடர்ந்து 7 நாட்களுக்குள் கவுர் விளக்கம் அளிக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரப்பிரதேச மதரஸாக்களில் தேசிய கீதத்துடன் வகுப்புகள் தொடங்க வேண்டும்: கல்வி வாரியம் உத்தரவு
இது குறித்து பாம்ரா கவுர் கூறுகையில் “ என்னுடைய கருத்துக்களுக்கு வண்ணம் பூசப்பட்டு திரித்துவிடப்பட்டுள்ளன. அனைவரும் சுயமாக அனைத்தையும் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் கருத்துக் கூறினேன்” எனத் தெரிவித்தார்
அங்கு அமர்ந்திருந்த சிறுமிகளைப் பார்த்து கவுர் கூறுகையில் “ எதிர்காலத்தில் உங்களை மற்றவர்கள் எங்கு உங்களைப் பார்க்க வேண்டும் என நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும். இதை அரசு செய்யாது. நான் அமரும் இடத்தில் அமர விருப்பமா அல்லது நீங்கள் அமர்ந்திருக்கும் இடமே போதுமா எதை விரும்புகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.