jallikattu festival: ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 22ம் தேதி விசாரணை
ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் எருது வண்டிப் பந்தயம் ஆகியவற்றை நடத்த தமிழகம், மகாராஷ்டிரா அரசுகள் சட்டம் இயற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட மனுக்கள் மீது நவம்பர் 22ம் தேதி விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் எருது வண்டிப் பந்தயம் ஆகியவற்றை நடத்த தமிழகம், மகாராஷ்டிரா அரசுகள் சட்டம் இயற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட மனுக்கள் மீது நவம்பர் 22ம் தேதி விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்த உள்ளது. இந்த அரசியல்சாசன அமர்வு நீதிபதி கே.எம்.ஜோஸப் தலைமையில், நீதிபதிகள் அஜெய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சிடி ரவிகுமார் ஆகியோர்இ இடம்பெறுவார்கள்.
ஆப்ரேஷன் கருடா ! 175 பேர் கைது! சிபிஐ, என்சிபி அதிகாரிகள் மாநில போலீஸாருடன் இணைந்து சோதனை
தமிழகத்தில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி 2005ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பாணுமதி தடை விதித்தார். அதன்பின் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடந்தது.
உத்தரப்பிரதேச மதரஸாக்களில் தேசிய கீதத்துடன் வகுப்புகள் தொடங்க வேண்டும்: கல்வி வாரியம் உத்தரவு
ஆனால் விதிமுறைகளை சரியாகப் பின்பற்றவில்லை எனக் கூறி பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் கடந்த 2014ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் நிரந்தரத் தடை விதித்தது.
இதையடுத்து, மாடுகளை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலி்ல் மத்திய அரசு சேர்த்தது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது.இந்த தடையை எதிர்த்து தமிழகம், மகாராஷ்டிரா அரசுகள் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றி, அதற்கு விலக்கு பெற்றுன
இந்தச் சட்டத்துக்கு அப்போது குடியரசுத் தலைவராக இருந்த மறைந்த பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்தார் இதையடுத்து, ஜல்லிக்கட்டுப்போட்டிகள் மிகுந்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த அனுமதித்து இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து பீட்டா, கூபா உள்ளிட்டஅமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இலவச உணவுதானியம் வழங்கும் PMGKAY திட்டம் டிசம்பர் வரை நீட்டிப்பு: ரூ.45 ஆயிரம் கோடி செலவு
ஆனாலும் பீட்டா உள்ளிட்டஅமைப்புகள் மேல்முறையீடு செய்து, ஜல்லிக்கட்டு, எருது பந்தயம் நடத்த சட்டத்திருத்தம் செய்து சட்டம் இயற்றிய தமிழகம், மகாராஷ்டிரா அரசுகளின் செயல் உச்ச நீதிமன்ற தீரப்புக்கு எதிரானது என மனுவில் தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஜல்லிக்கட்டுக்கும், காளை பந்தயத்துக்கும் அனுமதியளித்து தமிழகம், மகாராஷ்டிரா அரசு சட்டம் இயற்றியது சட்டவிரோதமானது என வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஜல்லிக்கட்டுக்கு எதிரானவழக்கை விசாரிக்க உள்ளது.