உ.பி.யில் திப்ருகார் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு விபத்தில் 4 பேர் பலி; பல பயணிகள் காயம்
சண்டிகர் - திப்ருகார் எக்ஸ்பிரஸ் (15904) ரயிலின் ஆறு பெட்டிகள் கோண்டாவின் மோதிகஞ்ச் மற்றும் ஜிலாஹி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டன. ரயில் திப்ருகர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோண்டா மாவட்டம் அருகே வியாழக்கிழமை பிற்பகல் திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டதில் நான்கு பயணிகள் உயிரிழந்தனர். பல பயணிகள் காயமடைந்துள்ளனர்.
திப்ருகர் நோக்கி சென்று கொண்டிருந்த சண்டிகர் - திப்ருகார் எக்ஸ்பிரஸ் (15904) ரயிலின் ஆறு பெட்டிகள் கோண்டாவின் மோதிகஞ்ச் மற்றும் ஜிலாஹி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தடம் புரண்டது என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மீட்புப் பணிகளில் உதவுவதற்காக ராணுவ வீரர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. கோரக்பூர் மற்றும் கோண்டா மாவட்டங்களில் இருந்து ரயில்வே மீட்புக் குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து உ.பி. அரசு தரப்பில் அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மாவிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவரும் நிலைமையை கண்காணித்து வருகிறார். அசாம் மாநில அரசு உ.பி.யில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக அசாம் முதல்வர் அலுவலகம் கூறியுள்ளது.
இந்திய ரயில்வே உதவி எண்களை வெளியிட்டுள்ளது:
லக்னோ- 8957409292
கோண்டா- 8957400965
அம்பானி வீட்டு புல்லட் புரூஃப் கார்... டிரைவர் சம்பளம் எவ்வளவுன்னு தெரிஞ்சா மயக்கமே வந்துரும்!