Asianet News TamilAsianet News Tamil

வறட்சி டூ வளர்ச்சி.! இந்தியாவை தலைநிமிர வைத்த இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் சாதனைகள்

சுதந்திர இந்தியாவின் வலிமையான அரசியல் தலைவர்களில் இந்திரா காந்திக்கு முக்கியமானவர் ஆவார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 31) தனது பாதுகாப்பு படை வீரர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

Former pm indira gandhi achievements and Economic policies
Author
First Published Oct 30, 2022, 10:43 PM IST

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி:

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகளான இவர்,சோகத்தினால் கட்டமைக்கப்பட்ட தனது வளர்ப்பின் காரணமாக தனிமை குழந்தை என வர்ணிக்கப்பட்டார். அவரின் வளர்ப்பு . இளம் வயதிலேயே தாயை இழந்த நிலையில், தந்தை நேருவும் சுதந்திர போராட்டத்தின் போது அடிக்கடி சிறையில் அடைக்கப்பட்டார். 

தனது பெரும்பாலான குழந்தை பருவத்தை வீட்டு பணியாளர்கள் துணையுடனும், பல உண்டுஉறைவிட பள்ளிகளிலும் கழித்தார். 1942 ஆம் ஆண்டில் இந்திரா ஃபெரோஸ் காந்தியை மணந்தார். பின்னர் அவரது தந்தை பிரதமரான பிறகு அவருக்கு உதவியாக பணியாற்றினார். கட்சியின் அரசியல் சச்சரவில் தன்னை தானே ஈடுபடுத்திக்கொண்ட இந்திரா, நேருவின் இறப்பிற்கு பிறகு லால் பஹ்தூர் சாஸ்திரியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

Former pm indira gandhi achievements and Economic policies

இதையும் படிங்க..குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக.. காங்கிரஸ் & ஆம் ஆத்மி நிலை ? ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் !

சாதனைகளின் நாயகி:

1966 ஆம் ஆண்டு கட்சியின் ஆதரவோடு பிரதமராக பதவியேற்ற இந்திரா, மெல்லிய தலைவராக இருப்பார் என்ற கணிப்புகளுக்கு நேர்எதிராக, அவர் கட்சி உறுப்பினர்களிடையேயை எதிர்ப்புக்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளையும் தேசியமயமாக்கினார். கட்சிக்குள்ளே இருந்த விரோதபோக்கினால் பதிவியிலிருத்து அவரை அகற்ற சிலர் முயன்றாலும், ஒவ்வொரு முறையும் அவற்றையெல்லாம் முறியடித்து, அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டார்.

வறட்சி & உணவு பற்றாக்குறை:

ஜனவரி 19, 1966-ல் இந்திரா காந்தி, இந்தியாவின் முதல் பெண் பிரதமரானார்.  சீனா, பாகிஸ்தான் என இரண்டு போர்கள், நேரு, சாஸ்திரி இருபெரும் தலைவர்களின் மரணம், மழையின்மை, வறட்சி, உணவுப் பற்றாக்குறை, அந்நியச் செலாவணி கையிருப்பின்மை, உலக சந்தையில் உணவுப் பொருட்களை வாங்க முடியாத சூழல், தானியங்களுக்கு அமெரிக்க பொதுச்சட்டம் என்று மிகவும் நெருக்கடியான, சவால்கள் மிகுந்த சூழ்நிலையிலேயே இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

Former pm indira gandhi achievements and Economic policies

வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர் மானியத்தை ஒழித்தது, உணவுக்கு அமெரிக்காவைச் சார்ந்திருந்த பசியும், பஞ்சமுமான ஒரு தேசத்தைப் பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது, துணிச்சலோடும் ராஜதந்திரத்தோடும் பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தைப் பிரித்துத் தனி நாடாக்கியது, வல்லரசுகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அணுகுண்டு சோதனை நிகழ்த்தியது, நேருவின் தொடர்ச்சியாக விஞ்ஞான, அறிவியல் தொழில்நுட்பத் துறையை வளர்த்தெடுத்தது என்று இந்திராகாந்தியின் சாதனைகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.

வரலாற்று சாதனைகள்:

இந்திய வரலாற்றின் மிகவும் நெருக்கடியான காலகட்டங்களை அசாத்திய துணிச்சலோடு கையாண்டு இந்தியாவை வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் சென்ற பெருமை அவருக்கு உண்டு. அவசர நிலைப் பிரகடனம் அவரது வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. ஆனால் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிற நேர்மையும், அவசர நிலைப் பிரகடனத்தை ரத்து செய்துவிட்டு தேர்தலைச் சந்திக்கிற தைரியமும் இந்திராவுக்கு இருந்தது. தேர்தலில் தோல்விக்குப் பிறகும் மூன்றே ஆண்டுகளில் இந்திரா காந்தியால் மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க முடிந்தது. 1980 பாராளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி 374 இடங்களில் மகத்தான வெற்றியடைந்தது.

இதையும் படிங்க..கோஷ்டி பூசலில் தென்காசி திமுக.. அறிவாலயம் கொடுத்த அதிர்ச்சி தகவல் - கவலையில் உடன்பிறப்புகள்

Follow Us:
Download App:
  • android
  • ios