ஐந்தாம் ஆண்டில் ஆயுஷ்மான் பாரத்.. உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமாக மாற்றும் மோடி - ஜே.பி. நட்டா புகழாரம்!

இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் இருந்து வரும் நரேந்திர மோடி அவர்கள் பல்வேறு திட்டங்களை துவங்கி வருகின்றார். அதில் மிக முக்கியமான ஒன்று தான் ஆயுஷ்மான் பாரத் திட்டம், இந்நிலையில் இந்த திட்டம் தொடங்கப்பட்து (23 செப்டம்பர் 2018) இன்றோடு 5 ஆண்டுகள் கடந்துவிட்டது குறித்து பாஜக தேசிய தலைவர் நட்டா பேசியுள்ளார். 

Former Minister J P Nadda praised pm modi on the 5th anniversary of ayushman bharat scheme ans

அப்போதைய மத்திய சுகாதார அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி.நட்டா, ஆயுஷ்மான் பாரத் குறித்து பேசும்போது, இந்த முயற்சி, பிரதமர் மோடியின் 'திங்க் பிக்' அணுகுமுறையை தான் பிரதிபலிக்கிறது என்றும், ஆரம்பத்தில் குடும்பத்திற்கு, வருடத்திற்கு 1 லட்சம் சிகிச்சை கவரேஜை அளித்த நிலையில், அதை பிரதமர் மோடி இப்பொது 5 லட்சமாக அதிகரித்துள்ளார் என்று கூறினார். 

மேலும் இந்த ஆயுஷ்மான் பாரத் என்ற மிகசிறந்த திட்டத்தை உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாக மாற்றுவதில் பிரதமர் மோடியின் கவனம் ஆரம்பத்திலிருந்தே தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் புகழாரம் சூட்டினார். இந்தியா முழுவதும் சுமார் 50 கோடி பேர் இந்த திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாறி மாறி குறைகூறும் இந்தியா - கனடா! அமெரிக்காவின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும்?

இந்த திட்டம் சரியாக செயல்படுவதை உறுதிசெய்ய பிரதமர் மோடி அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டார் என்றும் நட்டா நினைவுகூர்ந்தார். குறுகிய காலக்கெடுவுக்குள் இந்த திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்ற அவரது உறுதிப்பாடு வெறும் 9 மாதங்களில் நனவாகியது என்றார் அவர். 

ஆனால் இந்த திட்டம் துவங்கியபிறகும் பிரதமர் மோடியின் ஈடுபாடு அத்தோடு நிற்கவில்லை; அவர் பயனாளிகளுடன் கருத்துக்களை சேகரித்து தொடர்ந்து திட்டத்தை மேம்படுத்துவதற்காக பல தொடர்பு நிகழ்ச்சிகளை நடத்தினார். இது, பிரதமர் மோடி எப்படி அடிப்படை யதார்த்தத்துடன் இணைந்திருக்கிறார் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது என்றார் ஜே.பி. நட்டா.

Pm Kisan Yojana : விவசாயிகளுக்கு ரூ.2000 பணம் எப்போது கிடைக்கும்? எப்படி சரிபார்ப்பது? முழு விவரம் இதோ..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios