Pm Kisan Yojana : விவசாயிகளுக்கு ரூ.2000 பணம் எப்போது கிடைக்கும்? எப்படி சரிபார்ப்பது? முழு விவரம் இதோ..

இந்த திட்டத்தின் கீழ் அனைத்து நிலம் வைத்திருக்கும் விவசாயி குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

Pm Kisan Samman Yojana : When will farmers get Rs.2000? How to register? Here is the full details.. Rya

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டது தான் பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம்.  இந்த திட்டத்தின் கீழ் அனைத்து நிலம் வைத்திருக்கும் விவசாயி குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டில் ரூ.2000 என 3 தவணைகளாக இந்த நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 27ம் தேதி 14வது தவணையாக ரூ.2000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2000 செலுத்தப்பட்டது. இந்த நிலையில் 15வது தவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 15வது தவணை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையவர்கள்.

பிஎம் கிசான் யோஜனா : தகுதியற்ற விவசாயிகள் யார் யார்?

  • அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் விவசாய குடும்பங்கள்,
  • மாநில அல்லது மத்திய அரசு அலுவலகங்கைல் வேலை செய்யும் ஊழியர்கள்
  • ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்
  • மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள்
  • 10 ரூபாய்க்கு மேல் மாதாந்திர ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள்.

தீபாவளிக்கு சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - டிஏ ஹைக் எவ்வளவு தெரியுமா?

பிரதமர் கிசான் யோஜனா: பயனாளிகளின் பட்டியலை எவ்வாறு சரிபார்க்கலாம்?

  • பிரதமர் கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்:
  • முகப்புப்பக்கத்தில் 'Farmer Corner' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதன் பிறகு, '‘Beneficiary Status’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • கீழ்தோன்றும் மெனுவிலிருந்து மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி அல்லது கிராமத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • உங்கள் நிலையை அறிய 'Get Report' என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரதமர் கிசான் சம்மான் யோஜனாவின் 15வது தவணைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
  • Farmer Corner என்பதை கிளிக் செய்யவும்.
  • "New Farmer Registration" என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஆதார் எண்ணை வழங்கவும்.
  • தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
  • எதிர்கால குறிப்புக்காக அதை அச்சிடவும்.
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios