மாறி மாறி குறைகூறும் இந்தியா - கனடா! அமெரிக்காவின் ஆதரவு யாருக்குக் கிடைக்கும்?

ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தியா குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தது மிகப்பெரிய தவறு என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி கூறியுள்ளார்.

If US Has To Pick India Or Canada, It Will Choose...: Ex Pentagon Official  sgb

ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவை விட கனடாவுக்கு பெரிய ஆபத்தை இட்டுச் சென்றுள்ளதாக முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறியிருக்கிறார். இந்தியா - கனடா ஆகிய இரு நாடுகளில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்று அமெரிக்கா தேர்வு செய்யவேண்டுமானால், அமெரிக்கா இந்தியாவைத்தான் தேர்ந்தெடுக்கும் எனவும் அவர் கருதுகிறார்.

கனடாவை விட இந்தியா தான் அமெரிக்காவுக்கு மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியமான நட்பு நாடு என்றும், கனடா இந்தியாவுடன் சண்டையிடுவது யானைக்கு எதிராக எறும்பு சண்டை போடுவதைப் போன்றது என்றும் அவர் கூறினார்.

AI அம்சங்களுடன் புதிய வீடியோ எடிட்டிங் ஆப்! அசத்தலான வசதிகளுடன் யூடியூப் கிரியேட் அறிமுகம்!

ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தியா குறித்து குற்றச்சாட்டுகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், அவர் பிரதமர் பதவியில் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என்றும், அவர் விலகிய பிறகு அமெரிக்கா கனடாவுடனான உறவை மீண்டும் உருவாக்கிக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.

If US Has To Pick India Or Canada, It Will Choose...: Ex Pentagon Official  sgb

"பிரதமர் ட்ரூடோ மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் பின்வாங்க முடியாத வகையில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. அங்கு ஏதோ அரசாங்கத்திற்கு எதிராக இருக்கிறது. இல்லை என்றால், அரசே ஏன் ஒரு பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்தது என்பதை அவர் விளக்க வேண்டும்" என்று முன்னாள் பென்டகன் அதிகாரி கூறினார்.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் 18ஆம் தேதி கனடாவின் சர்ரே, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்குப் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ பேசியதை அடுத்து இந்தியா - கனடா இடையே மோதல் வெடித்தது.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது... கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம்!

இரு நாடுகளும் தங்கள் நாடுகளில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேன உத்தரவிட்டன. பின்னர், ட்ரூடோ தனது கருத்துகளில் இந்தியாவைக் குற்றம்சாட்டவில்லை என்றும் இந்தியா இந்த விவகாரத்தைக் நல்ல விதமாகக் கையாண்டிருக்கலாம் என்றுதான் கூறியதாகவும் தெரிவித்தார். ஆனால், அதை ஏற்பாகத இந்தியா கனடா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்றும் கனடா தனது நற்பெயரைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றும் விமர்சித்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் இந்தியா மீதான தன் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தும் விதமாகப் பேசியிருக்கிறார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையின் பின்னணியில் இந்தியா உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை கனடா சில வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்துகொண்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான பணியை மேற்கொள்ள விரும்புவதாகவும் அதற்கு இந்தியா ஒத்துழைப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சந்திரயான்-3 லேண்டர், ரோவரை மீண்டும் இயங்க வைக்கும் முயற்சி ஒத்திவைப்பு: இஸ்ரோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios