முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பிறந்த தினம்.. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சோனியா மற்றும் பிரியங்கா காந்தி!

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் 79 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவருடைய நினைவிடத்திற்கு சென்று தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

Former Indian Prime Minister Rajiv Gandhi 79th birthday sonia gandhi priyanka gandhi paid tribute at virbhoomi

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் மும்பை நகரில் கடந்த 1944ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி பிறந்தவர். இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த இவர் கடந்த 1968ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களை மணந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி அவருடைய 47வது வயதில் காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் என்ற இடத்தில் நடந்து குண்டு வெடிப்பில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு பதவியேற்ற ஆறாவது பிரதமர் ராஜீவ் காந்தி என்பது நினைவுகூரத்தக்கது.

சந்திரயான் 3.. அடுத்த ஸ்டாப் நிலவு தான்.. இந்தியர்கள் கொண்டாடப்போகும் அந்த வெற்றி நிமிடங்கள் - ஒரு பார்வை!

1984ம் ஆண்டு இந்திய பிரதமராக பதவி ஏற்ற அவர், டிசம்பர் 1981ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்திய அரசியலில் பல உயர் பதவிகளில் இருந்து வந்த ராஜீவ் காந்தி அவர்கள் இந்தியாவின் மூன்றாவது பிரதமராக பதவி வகித்த இந்திரா காந்தியின் மகன் ஆவர். 

1984ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற ராஜீவ் காந்தி, ஜனவரி 1985ல் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை இயற்றியது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்தச் சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற உறுப்பினர், அடுத்த தேர்தல் வரை எதிர்க்கட்சியில் சேர முடியாது. கட்சி மாறுவதன் மூலம் ஊழல் மற்றும் அமைச்சர்களுக்கு லஞ்சம் கொடுப்பதைத் தடுக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. 

இன்று அவருடைய 79வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவருடைய நினைவிடமான வீர் பூமியில் அவருடைய மனைவியும் காங்கிரஸ் கட்சியை தலைவருமான சோனியா காந்தியும் அவருடைய மகள் பிரியங்கா காந்தியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அதிமுக மாநில மாநாடு..! மதுரையில் குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios