சந்திரயான் 3.. அடுத்த ஸ்டாப் நிலவு தான்.. இந்தியர்கள் கொண்டாடப்போகும் அந்த வெற்றி நிமிடங்கள் - ஒரு பார்வை!

இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 திட்டம், நிலாவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி மதியம் 2:30 மணி அளவில் துவங்கப்பட்டது. சுமார் 20 நாட்கள் கழித்து சந்திரயான் 3 நிலவின் வட்டப்பாதைக்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.
 

Chandrayaan 3 finished its final lunar orbit next stop is moon what happens next full details

சரி இனி நடக்கவிருப்பது என்ன?

நிலவின் வட்டப்பாதையில் தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சந்திரயான் 3, வருகின்ற 23ம் தேதி மாலை நிலவின் மேல் பிறப்பில் தரையிறங்க உள்ளது. இதுவரை பல கட்ட தடைகளை தாண்டி இருந்தாலும், நிலாவினுடைய மேல் பிறப்பில் இறங்கும் பொழுது சந்திரயான் எடுத்துக்கொள்ளும் அந்த 15 நிமிடங்கள் தான் மிக மிக முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

விக்ரம் லேண்டர் தன்னை இப்பொது ஒரு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது, அது நிலவில் இருந்து குறைந்தபட்ச தூரமாக 25 கிமீ மற்றும் தொலைவில் அதிகபட்ச தூரமாக 134 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த சுற்றுப்பாதையில் இருந்துதான் நிலவின் தென் துருவப் பகுதியில் வரும் புதன் கிழமை மென்மையான தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

G20 நாடுகளுக்கான பொருளாதார அமைச்சர்கள் கூட்டம்.. ஆதார் முதல் மொபைல் போன் வரை - பிரதமர் மோடியின் உரை இதோ!

டீ புஸ்டிங் 
 
அது என்ன டீ புஸ்டிங், இதுவரை அளிக்கப்பட்ட உந்துசக்தி, மெல்ல மெல்ல குறைக்கப்படுவது தான் டீபுஸ்டிங். ஏற்கனவே நிலவில் வட்டப்பாதைக்குள் நுழைய ஒரு டீ புஸ்டிங் செய்யப்பட்டது, இனி இரண்டாவது மற்றும் இறுதி டீபூஸ்டிங் நடவடிக்கையானது LM சுற்றுப்பாதையை 25 கிமீ x 134 கிமீ ஆகக் குறைத்துள்ளது. ஆகவே இனி நிர்ணயிக்கப்பட்ட தரையிறங்கும் இடத்தில் நின்று, சூரிய உதயத்திற்காக அது காத்திருக்கும். பல கோடி இந்தியர்களின் கனவான அந்த நிலவின் தென்துருவ தரையிறக்கம் ஆகஸ்ட் 23, 2023 அன்று மாலை 5.45 மணிக்கு துவங்கும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்ல மெல்ல இறங்கும் லேண்டர்

லேண்டரில் உள்ள ராக்கெட்டுகள் டீ பூஸ்ட் செய்யப்பட்டு, லேண்டெர் நிலவின் தென் துருவத்தில் மெல்ல மெல்ல தரையிறக்கப்படும். நிலவிலிருந்து சுமார் 10 மீட்டர் உயரத்தை லேண்டர் எட்டும்போது அதற்கு உந்துவிசை கொடுத்து வரும் ராக்கெட்டுகளின் செயல்பாடு முழுமையாக நிறுத்தப்படும். காரணம் நிலவின் மேற்பரப்பில் மென்மையான துகள்கள் இருப்பதால், ராக்கெட் அதி வேகத்துடன் நேரடியாக அதில் தரை இறக்கப்படும்போது நிலவின் மீது படிந்துள்ள தூசுகள் லேண்டரை சேதப்படுத்தவும் அல்லது அதன் பார்வையை மங்கச் செய்யவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. 

ஆகவே அந்த உந்துவிசை கொடுக்கும் ராக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு லேண்டர் தரையிறக்கப்படும். லேண்டரின் வேகத்தை அதன் உள்ளே உள்ள கணினி அதனுடைய சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த இறுதி கட்டத்தில் நிலவின் மேல் பரப்பிலிருந்து சுமார் 800 மீட்டர் உயரத்திலிருந்து 10 மீட்டர் உயரம் அடைவதற்கு அந்த லேண்டருக்கு வெறும் 4.3 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல கோடி இந்தியர்கள் காத்திருக்கும் அந்த தருணம்

லேண்டரின் வருகையால் நிலவின் மேல் பரப்பில் இருந்த தூசுகள் மேல எழும்பிய நிலையில், அவை அடங்கும் வரை காத்திருந்து தனது இறுதி 270 வினாடி பயணத்தை லேண்டர் மேற்கொள்ளும். நிலவின் மீதுள்ள தூசு பார்ப்பது அடங்கிய பிறகு லேண்டர் நிலவின் மீது தலையிறங்க, அதிலிருந்து பக்கவாட்டில் கதவுகள் திறக்கப்பட்டு, அதில் பொருத்தப்பட்டிருக்கும் நிலவை ஆய்வு செய்யும் ரோவர் வெளியே நகர்ந்து வரும். இறுதியில் லேண்டரும், ரோவரும் ஒருவருக்கொருவர் புகைப்படங்களை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் அந்த ஒரு வினாடிக்காகத்தான் ஒட்டுமொத்த இந்தியாவே காத்திருக்கிறது. அந்த ஒரு நொடி அறிவியல் உலகில் இந்தியாவின் மாபெரும் சாதனை பொன்னெழுத்துக்களால் குறிக்கும்.

ரஷ்யாவின் லூனா-25 தரையிறங்குவதில் சிக்கல்! விண்கலத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios