வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கிய இந்தியாவின் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் 46-வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 2018-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி ரஞ்சன் கோகாய் பதவியேற்றார். இவர் நீதிபதியாக பதவியில் இருந்த போது ரஃபேல் விவகாரம், மத்திய புலனாய்வு இயக்குநர் அலோக் வர்மா பதவி நீக்கம், அயோத்தி பாபர் மசூதி விவகாரம், சபரிமலை உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், தான் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக ராமர் கோவில் வழக்கு கருதப்பட்டது. இதனையடுத்து, நவம்பர் 17-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதையும் படிங்க;- திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து... மு.க.ஸ்டாலின் திடீர் அறிவிப்பு..!

இந்நிலையில், தொடர்ந்து 250 உறுப்பினர்களை கொண்ட மாநிலங்களவையில் 238 பேர் மறைமுக தேர்தல் மூலமாகவும், 12 பேர் குடியரசுத் தலைவர் நியமனத்தின் மூலமும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தியாவின் நலனை கருத்திற்கொண்டு மாநிலங்களவை எம்.பிக்களை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. 

இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் கட்டிலில் வெறி தீர உல்லாசம்... நேரில் பார்த்ததால் பெற்ற மகனுக்கு தாய் கொடுத்த பரிசு..!

இந்நிலையில், 4 மாதங்களில் பணி ஓய்வு பெற்ற ரஞ்சன் கோகாய்க்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். மாநிலங்களவையில் ஒரு நியமன எம்.பியின் பதவி காலம் முடிவடைவதால் அந்த இடத்துக்கு ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் மத்திய அரசு, ஓர் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியை மாநிலங்களவைக்குப் பரிந்துரைத்தது இதுவே முதன்முறையாகும். மேலும், நிர்வாகத்துக்கும் நீதித்துறைக்கும் இடையில் இருக்க வேண்டிய நேர்மையான இடைவெளி பற்றிய கேள்விகளையும் இந்த நியமனம் எழுப்புகிறது.