வனத்துறை ஆட்சேர்ப்பு: பெண்களின் மார்பை அளவிடும் முறை.. ஹரியானா அரசு விளக்கம்
வனப்பாதுகாவலர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பெண்களின் மார்பை அளவிடும் நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தது.
ஹரியானா பணியாளர் தேர்வாணையம் (HSSC), கடந்த 7-ம் வனப்பாதுகாவலர் மற்றும் துணை வனப் பாதுகாவலர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி, இந்த பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போது பெண்களின் மார்பை அளவிடும் நடைமுறை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தது. அதாவது போது 74cm அல்லது 79cm 'சாதாரண' மார்பு அளவைக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹரியானா அரசின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் வனப் பாதுகாவலர் மற்றும் துணை வனப் பாதுகாவலர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான பெண் வேட்பாளர்களின் மார்பை அளவிடும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அம்மாநில அரசு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
2 நாள் பயணமாக பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி.. இன்று எந்தெந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்?
ஹரியானா வனச் சேவை (நிர்வாகி) குரூப் சி விதிகள், 1998-ன் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது, இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உயரம் மற்றும் மார்புக்கான உடல் தரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களிலும், இத்தகைய ஆட்சேர்ப்புக்கள் அனைத்தும் இந்த உடல் தரநிலைகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன என்றும். இந்த விதிகளின் விளைவாக, பல ஆண்டுகளாக 22 பெண் வனக் காவலர்களும், நான்கு பெண் வனத்துறையினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் அவர் கூறியுள்ளார்.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் தனது வழிகாட்டுதல்களில், ஆட்சேர்ப்பு செயல்முறையின் போது ஆண்கள் மற்றும் பெண்களின் உயரம் மற்றும் மார்பு அளவை அளவிடுவதற்கான உடல் தரங்களை பரிந்துரைத்துள்ளது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். மேலும் இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையின் போது பெண் வேட்பாளர்களின் உடல் அளவீடுகளை எடுப்பதற்காக பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
மேலும் "இந்த ஆண்டு தேர்வு செயல்முறையிலும் இது கண்டிப்பாக பின்பற்றப்படும். பெண் வேட்பாளர்களுக்கான உடல் அளவீட்டு செயல்முறையில் பெண் மருத்துவர்கள் மற்றும் பெண் பயிற்சியாளர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். ஜூலை 12 முதல் உடல் அளவீடு செயல்முறை தொடங்கும். வனக் களப் பணியாளர்களை நியமிக்கும் போது ஆண் மற்றும் பெண் வேட்பாளர்களுக்கான உடல் அளவீடுகள் தொடர்பான குறிப்பிட்ட தரநிலைகளை பஞ்சாப் பின்பற்றுகிறது” என்று தெரிவித்தார்.
ஹரியானா எம்எல்ஏ கன்னத்தில் பளார்! வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பெண் சீற்றம்!