சவூதி அரேபியாவுக்கு பயணம் செய்யும் இந்தியர்கள், விசா பெறும்போது, போலீஸ் சான்று தேவையில்லை என்று சவூதி அரேபியா தூதரகம் அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவுக்கு பயணம் செய்யும் இந்தியர்கள், விசா பெறும்போது, போலீஸ் சான்று தேவையில்லை என்று சவூதி அரேபியா தூதரகம் அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள சவூதி அரேபியா தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதவாது: 

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’ இன்று விண்ணில் பாய்கிறது:10 அம்சங்கள்

இந்தியா மற்றும் சவூதி அரேபியா அரசுக்கும் இடையிலான வலுவான ராஜாங்கரீதியான உறவு மற்றும் நட்புறவைக் கருத்தில் கொண்டு, இந்தியர்கள், விசா பெறும்போது, போலீஸ் சான்று பெறத் தேவையில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுவடையும். இனிமேல், சவூதி அரேபியாவுக்கு வரும் இந்தியர்கள் விசா பெறுவதற்காக போலீஸ் சான்றுக்காக காத்திருக்கத் தேவையில்லை. 

மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம்… யார் அவர்?

சவூதி அரேபியாவில் வசிக்கும் 20 லட்சம் இந்தியர்களும், அவர்கள் எங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றும் பங்களிப்பையும், அமைதியாக வாழ்வதையும் நினைத்து பெருமைப்படுகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

இந்த நடவடிக்கையின் மூலம் சவூதி அரேபியா செல்லும் இந்தியர்களுக்கு விண்ணப்பம் விரைவாக பரீசிலிக்கப்பட்டு விசாவும் விரைவாக வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் சுற்றுலா செல்லும் இந்தியர்களும் விசாவுக்காக காத்திருக்கத் தேவையில்லை, ஆவணங்கள் எடுத்துச் செல்வதும் குறையும்

சவார்க்கரை அவமதித்துவிட்டார்! ராகுல் காந்தி மீது சவார்க்கர் பேரன் போலீஸில் புகார்

சவூதி மன்னர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான், இந்த மாதத்தில் பிரதமர் மோடியைச் சந்திக்க இருந்தார், ஆனால், அந்தப் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.