Vikram-s Rocket launch:இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’ இன்று விண்ணில் பாய்ந்தது!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ்(Vikram-S) ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று விண்ணில் பாய்ந்தது. 

Today marks the launch of India's first : 10 interesting Facts

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-எஸ்(Vikram-S) ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று விண்ணில் பாய்ந்தது. 

 

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள் 

வரலாற்றில் முதல்முறை! இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விரைவில் விண்ணில் பாய்கிறது: எப்போது?

1.    இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் எனும் நிறுவனம் ராக்கெட்டை வடிவமைத்து ஏவ உள்ளது.நாட்டின் விண்வெளித்துறையில் ராக்கெட் அனுப்பும் முதல் தனியார் நிறுவனமாகும். தனியார் நிறுவனங்களும் விண்வெளித்துறையில் வரலாம் என்று கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Today marks the launch of India's first : 10 interesting Facts

2.    ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஏவும் ராக்கெட்டிக்கு விக்ரம்-எஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இஸ்ரேவின் நிறுவனரான விக்ரம் சாராபாய் நினைவாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளிப்பயணத்துக்கு பிராரம்ப்(தொடக்கம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் 3 விதமான பேலோடுகள் உள்ளன. ஆந்திராவின் என் ஸ்பேஸ் டெக் இந்தியா, சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் கிட்ஸ், அர்மேனியாவின் பசூம்கியூ ஸ்பேஸ் ரிசர்ச் லேப் ஆகியவற்றின் பேலோடுகள் உள்ளன

3.    விக்ரம்-எஸ் ராக்கெட் 81 கிமீ அட்சரேகையில் ஏவப்படுகிறது, ஏவப்பட்ட 5 நிமிடங்களில் தரைத்தளத்தை வந்தடையும்.. இந்த ராக்கெட் இன்று காலை 11.30 மணிக்கு ஏவப்படும். திட எரிபொருள் மட்டுமே இந்த ராக்கெட்டில் உள்ளது. 545 கிலோ எடை , 6 அடி நீளம் கொண்ட ராக்கெட் சவுண்டிங் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது

 

மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம்… யார் அவர்?

4.    உலகின் அனைத்து ராக்கெட்டுகளின் கலவையாக விக்ரம் எஸ் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் 3 நிறுவனங்களின் சிறிய செயற்கைக்கோள்கள் உள்ளன. ராக்கெட் ஏவப்பட்டு 17.9 கி.மீ தொலைவை அடைந்தவுடன் ராக்கெட்டின் எரிபொருள் எரியத் தொடங்கும் 81.5 கி.மீ தொலைவை எட்டியவுடன் ராக்கெட் தன்னுடைய சுமையை புவியின் நீள்வட்டப்பாதையில் தளர்த்தும் 

5.    ராக்கெட் ஏவுதல் மூலம் விக்ரம் ராக்கெட்டில் உள்ள டெலிமெட்ரி, குளோபல் பொசிஷனிங் சிஸ்டம், ஆன்-போர்டு கேமரா, டேட்டா அகிசிஷன் மற்றும் பவர் சிஸ்டம்ஸ் போன்றவற்றுக்கு செயல்விளக்கம் கொடுக்கப்படும்

6.     இந்த ராக்கெட் திட்டத்துக்காக ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ரூ.526 கோடி முதலீடு  செய்துள்ளது. இதன் மூலம், விண்வெளி அனைவருக்குமானது, எதிர்காலத்துக்காக பணியாற்றுகிறோம் என்பதை வலியுறுத்துகிறது.

7.    ஐஎன்-ஸ்பேஸ் தலைவர் டாக்டர் பவான் கோயங்கா கூறுகையில் “ தனியார் ராக்கெட் ஏவும் திட்டம் மிகப்பெரிய மைல்கல். ஏற்கெனவே 150 தனியார் நிறுவனங்கள் ஏவு வாகனம், செயற்கைக்கோள், பேலோடு, ஏவுதளம் ஆகியவை உருவாக்க விண்ணப்பித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்

Today marks the launch of India's first : 10 interesting Facts

8.    ராக்கெட் திட்டங்கள் அனைத்தும் வணிக நோக்கத்தோடு இருந்தாலும், அதற்குள் பொதுநல நோக்கமும் அடங்கியிருக்கும். ஆனாலும் இது முழுமையான வர்த்தக நோக்கம்தான் என்று கோயங்கா தெரிவித்துள்ளார்

சவார்க்கரை அவமதித்துவிட்டார்! ராகுல் காந்தி மீது சவார்க்கர் பேரன் போலீஸில் புகார்

9.    இஸ்ரோ நிறுவனம் செலுத்தும் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்துதான் விக்ரம்-எஸ் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படஉள்ளது. இஸ்ரோ அனுப்பும் மிகப்பெரிய ராக்கெட் போல் அல்லாமல் மிகவும் சிறியதாகவும், அதேநேரம் அதிக சத்தம் எழுப்பும் ராக்கெட்டாகவும் இருக்கும்

10.    விக்ரம்-எஸ் ராக்கெட் தான் சுமந்து செல்லும் பேலோட்களை விண்வெளியின் குறைந்த தொலைவு நீள்வட்டப் பாதையில் 500கி.மீதொலைவில் நிலைநிறுத்தும்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios