புடவைக்காக இப்படியா சண்ட போடுறது..? முடியை பிடித்து, அடித்து களேபரம் செய்யும் பெண்கள்.. வைரல் வீடியோ
பெங்களூருவில் பட்டுப் புடவைக்காக 2 பெண்கள் முடியை இழுத்து சண்டையிட்டு கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் சில சமயங்களில் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வகையில் பெங்களூருவில் பட்டுப்புடவை விற்பனையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. பெங்களூருவின் மல்லேஸ்வரத்தில் ஆண்டுதோறும் பட்டுப்புடவை விற்பனை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு மைசூர் பட்டுப் புடவை விற்பனையின் ஒரு வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் புடவைக்காக இரு பெண்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும், முடியை இழுத்துக்கொண்டும் சண்டையிடுவதை பார்க்கமுடிகிறது.
இதையும் படிங்க : திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதியா.? வாய்ப்பே இல்லையென மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி
அந்த சண்டையை ஒரு சில பெண்கள் கவனித்தாலும், அதை கண்டுகொள்ளாமல் சில பெண்கள் புடவை வாங்குவதில் மும்முரமாக இருந்தனர். பின்னர் காவல்துறையினர் வந்த தலையிட்ட பிறகே அந்த சண்டை முடிவுக்கு வந்தது.
ட்விட்டரில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் இதுகுறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். புடவை என்பது வெறும் ஆடையல்ல அது ஒரு எமோஷன் என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர் ஒருவர் “ என்ன நடக்கிறது என்று தலையை கூட திருப்பாமல் ஷாப்பிங் செய்பவர்களை எனக்கு பிடித்திருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். புடவைகளுக்கு எவ்வளவு பெரிய தேவை உள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்த வீடியோவை விளம்பரமாக காட்டலாம் என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, பாங்காக்கில் இருந்து கொல்கத்தாவுக்குச் சென்ற சர்வதேச விமானத்தில் இரண்டு இந்திய பயணிகள் சண்டையில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. தாய் ஸ்மைல் ஏர்வே விமானத்தில் இருந்த இருவர், உடல் ரீதியான சண்டையில் ஈடுபடுவதற்கு முன்பு கடுமையாக வாதிட்டனர், அவர்களில் ஒருவர் மற்றவரைக் கடுமையாகத் தாக்கினார். எனினும் ஒரு விமானப் பணிப்பெண் நிலைமையைத் தணிக்க முயன்றார். ஒரு கட்டத்தில், அவர்களில் ஒருவர் இடைவிடாமல் மற்றவரை முகத்தில் அடிக்கவும் அறையவும் தொடங்கினார், இது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. சண்டைக்கான காரணம் தெரியவில்லை என்றாலும், அந்த வீடியோ வைரலான நிலையில் இருவரின் நடத்தையை மக்கள் பரவலாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சுட்டெரிக்கும் வெயில்.. கடும் வெப்பத்தால் காரின் முன்பக்க பம்பர் உருகியதால் அதிர்ச்சி.. வைரல் புகைப்படங்கள்..