பாஜக வின் மூத்த தலைவர் அத்வானியின் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்வானியின் வீடு டெல்லி பிருத்விராஜ் சாலையில் உள்ளது. வீட்டில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வந்தன.  

அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசாரே  விரைந்து வந்து சில நிமிடங்களில் தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறை உதவி இல்லாமலேயே உடனடியாக தீயை அணைத்ததால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. 

தோட்டத்தின் அருகில் பழுதுபார்க்கும் வேலை நடைபெற்றபோது, ஷாட் சர்க்யூட் காரணமாக அங்குள்ள கேபிள் திடீரென தீப்பற்றி எரிந்தது என்றும்,. போலீசார் உதவியுடன் சிறிது நேரத்திலேயே தீ அணைக்கப்பட்டது அதிகாரிகள் தெரிவித்தனர்.