டெல்லியில் மெட்ரோ ரயிலில் இருக்கைகாக இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் மெட்ரோ ரயிலில் இருக்கைகாக இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நாம் அனைவரும் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் சில நேரங்களில் பயணத்தின் போது சிலருடன் வாக்குவாதம் அல்லது சண்டை ஏற்படும். அப்படி டெல்லி மெட்ரோவில் இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் ஜாமீன் நீட்டிப்பு.. சூரத் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்த வீடியோவை பாஜகவின் யுவ மோர்ச்சாவின் தேசிய செயலாளர் தஜிந்தர் பால் சிங் பக்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இரண்டு பெண்கள் டெல்லி மெட்ரோவில் இருக்கை பிரச்சினையில் சண்டையிடுகின்றனர். அப்போது சண்டையிட்ட பெண்களில் ஒரு பெண், பெப்பர் ஸ்பிரேயை எடுத்து தன்னிடம் சண்டைப்போட்ட பெண் மீது அடித்தார்.
இதையும் படிங்க: மர்ம நபரின் புகைப்படம் வெளியீடு; தீவிரவாதிகளின் சதி செயலா என்ற கோணத்தில் விசாரணை!!
இதை அடுத்து வாக்குவாதம் வன்முறையாக மாறியது. பெண் பெப்பர் ஸ்பிரேயை பிடிக்க முயலும் போது, பெப்பர் ஸ்பிரே வைத்திருந்த பெண் எதிரே உள்ள பெண்ணின் கையை பிடித்து அவர் மீது ஸ்பிரேவை அடித்தார். இதனால் அங்கிருந்த அனைவருக்கும் நெடி ஏறியதால் தும்மல் ஏற்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைராகி உள்ளது. இந்த வீடியோ இதுவரை 7,70,000 பார்வைகளையும் 2,600 லைக்குகளையும் பெற்றுள்ளது.
