வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞருடன் திருமணம் செய்து கொள்ளவிருந்த மகளை கொடூரமாக கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் பூவதி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா (22). இவர் மருத்துவ கல்லூரியில் டயாலிசிஸ் மையத்ல் வேலை பார்த்து வந்தார். இவரது தந்தை ராஜன். இவர் டிரக் ஓட்டுநராக உள்ளார்.

ஆதிரா, மாற்று சமூகத்தை சேர்ந்தவரான இளைஞரைக் காதலித்து வந்தார். அந்த இளைஞர் தற்போது ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆதிராவின் தந்தை ராஜனுக்கு இந்த காதலில் விருப்பமில்லை என்று தெரிகிறது. ஆனாலும் ஆதிராவின் தாய் மகளின் ஆசைப்படி திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார்.

ஆதிராவின் தந்தையைத் தவிர குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் இந்த திருமணத்தில் முழு சம்மதம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு இன்று திருமணம் நடக்க இருந்தது. 

வேறு சமூகத்தைச் சேர்ந்தவருடன் மகளுக்கு திருமணம் நடப்பதை ராஜனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நேற்றிரவு மீண்டும் ஆதிராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ராஜன். அவர்களுக்கு ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி மகளை கத்தியால் குத்தியுள்ளார் ராஜன். 

ஆதிராவை, ராஜன் கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளால். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆதிராவை, உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்க கொண்டு சென்றனர். ஆனால், ஆதிரா பாதி வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து ராஜனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடததி
வருகின்றனர்.