பலிலா, நவ. 17-

மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த பணம் செல்லாமல் போனதால், விரக்தியடைந்த, தந்தை மாரடைப்பால் மரணடைந்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம், சாஹத்வர் நகர் பஞ்சாயத்தை சேர்ந்தவர் சுரேஷ் சோனார். இவரின் மகள் சுமன். இவருக்கு அடுத்து சில நாட்களில் திருமணம் நடக்க இருந்தது.

இந்நிலையில், மணப்பெண் சுமனுக்கு திலகமிடும் சடங்கு நேற்று நடக்க இருந்தது. இந்த சடங்குக்கு செலவுக்கு பணம் தேவைப்பட்டது. இதனால், தான் வைத்திருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றுவதற்காக சுரேஷ் சோனார் நேற்று முன் தினம் சென்றார்.

ஆனால், தான் கணக்கு வைத்திருந்த ஸ்டேட் வங்கியில் நீண்ட நேரம், வரிசையில் சுரேஷ் காத்திருந்தார். மாலை வரை காத்திருந்தும் பணம் பெற முடியவில்லை. இதனால், விரக்தி அடைந்த, மனநிலையுடன் சுரேஷ் வீட்டுக்கு திரும்பினார்.

மிகுந்த மனவேதனையுடன் இருந்த சுரேஷுக்கு, நேற்று அ திகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதில், அவர் உயிரிழந்தார். மகளின் திருணமனச் சடங்கு நேற்று நடக்க இருந்த நிலையில், தந்தை உயிரிழந்தது அந்த குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரூபாய் நோட்டு செல்லாதது என்று பிரதமர் மோடி அறிவித்த ஒரு வாரத்தில் வரிசையில் நின்று உயிரிழந்தோர், சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இறந்தோர், மாடியில் இருந்து கீழே விழுந்தோர் என பலியானவர்கள் எண்ணிக்கை 20க்கும் மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.